பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தித்ருகுறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 323;

ஈசனை.அந்த ஏகாம்பரேசுவரனை. க்:சந்தி. காண்பதேதரிசனம் புரிவதனையே. விரும்பி.விழைந்து. நிரந்தரம். இட்ை விடாமல். திரு-தன்னுடைய அழகிய். வாக்கினில்வர்க்கில்; திரு வாயில். நிகழ்வது-உச்சரிப்பவை: ஒருமை. பன்மை மயக்கம். அஞ்சு எழுத்துமே-ந, ம, சி, வா, ய. என்னும் ஐந்து எழுத்துக்கள் அடங்கிய பஞ்சாட்சரத்தையே. எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். ஆக-ஆக இருக்க. అ. டைய-அடியேங்களை ஆட்களாகப் பெற்ற. ஆள்: ஒருமை பன்மை மயக்கம். இது சேக்கிழார் தம்மையும் பிற தொண் டர்களையும் சேர்த்துக் கூறியது. அம்மை-காமாட்சி அம்மை. செம்மலர்-தன்னுடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த மலர்: ஒருமை பன்மை மயக்கம், க்சந்தி. கை-தன்னுடைய திருக்கரங்களை; ஒருமை பன்மை மயக்கம். குவித்தருளி-தன்னுடைய தலையின் மேல் வைத்துக்கும்பிட். டருளி. த்:சந்தி. தஞ்சமாகிய-பற்றுக் கோடாக உள்ள. அரும்-செய்வதற்கு அருமையாக இருக்கும். த்வம்-தவத்தை. புரிய-அந்தக் காமாட்சி அம்மை செய்தருள். த்:சந்தி. அவள்அந்த அம்மையினுடைய. தனி ஒப்பற்ற, ப்:சந்தி. பெரும்பெருமையைப் பெற்று விளங்கும். கணவர்-கொழுநராகிய ஏகாம்பரேசுவரர். தரிப்பரே-அந்தத் தவத்தைப் பார்த்துச் சகிப்பாரோ?" வஞ்சம்.வஞ்சகச் செயல்கள்ை: ஒருமை. பன்மை மயக்கம். நீக்கிய-போக்கியுள்ள. மாவின்-மாம்ர்த்தி னுடைய. மூலத்தில்-அடியில் வந்து-எழுந்தருளி வந்து. மலை-அந்த இமய மலையின் அரசனுடைய திணை மயக்கம், மகள்-புதல்வியாகிய, காமாட்சி அம்மை. காண தம்மைத் - தரிசனம் புரியும் வண்ணம். தோன்றினார்-தம்முடைய காட்சியை வழங்கியருளினார், - -

பிறகு வரும் 58-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அவ்வாறு காமாட்சி அம்மை ஏகாம்பரேசுவரரைத் தரிசித்த சமயத்தில் அவள் புரிந்த தவத்தின் பிரயோசன்ம் :