பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவாட்டாய நாயனார் புராணம் 29.

என்றும்நம் உலகில் வாழ்வாய் என்றவர் உடனே கண்ண மன்றுளே ஆடும் ஐயர் மழவிடை உகைத்துச் சென்றார்.' என்று-என. அவர்-அந்தத் தாயனார். போற்றி-வணக்கங் களை ஒருமை பன்ம்ை மயக்கம். செய்ய-திருவாய் மலர்ந் தருளிச் செய்ய. இடபவாகனராய்-இடபவாகனத்தின் மேல் எழுந்தருள்பவராகி. த்:சந்தி. தோன்றி-காட்சி அளித்து. நீ புரிந்த-ெேசய்த செய்கை-செயல். நன்று. நன்றாக இருக்கிறது. நல்-நல்ல. நுதலுடன்-நெற்றியைப் பெற்ற உன்னுடைய பத்தினியோடு. நன்னுதல் : அன் மொழித் தொகை, கூடசேரவந்து. என்றும்-எல்லாக் காலத் திலும். நம்-நம்முடைய. உலகில்-சிவலோகத்தில், வாழ்வாய்-வாழ்வாயாக. என்று. எனக் கூற; எச்சத்திரிபு. அவர் அந்தத் தாயனார். உடன்-அந்தப் பெருமானோடு. ஏ: அசை நிலை. நண்ண-செல்ல. மன்றுள்-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில். ஏ: அசைநிலை. ஆடும்-திருநடனம் புரிந்தருளும். ஐயர்ஜயராகிய நடராஜப் பெருமானார். மழ-இளம்பருவத்தைப் பெற்ற. விடை-இடப வாகனத்தை, உகைத்து-அதன் மேல் ஏறி ஒட்டிக் கொண்டு. ச்: சந்தி. சென்றார்சிதம்பரத்திற்கு எழுந்தருளினார். .

அடுத்து உள்ள 22-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: ' "அன்பைப் பெற்ற திருவுள்ளத்தைக் கொண்ட பக்த ராகிய தாயனார், பரம் பொருளாகி விளங்கியிருக்கிற பெருமையைப் பெற்றவராகிய சிவபெருமானார் திருவமுது செய்யும் பாக்கியத்தை அடியேன் அடையவில்லை' என எண்ணி மாமரத்தில் காய்த்த கோடுகளை உடைய வடுக்களைக் கடிக்கும் சத்தம் விடேல் விடேல்' என்று கேட்பதற்கு முன்னால் தம்முடைய வன்மையான கழுத்தில் அரிவாளை வைத்து அறுத்துக் கொண்டமையால் அவர் "அரிவாட்டாய நாயனார்' என்ற பரிசுத்தமான திருநா மத்தைப் பெற்றவர் ஆனார். பாடல் வருமாறு: ' ' ' ' '.