பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 327

பூசை புரியும் பொருட்டு. அவர்தாம்-அந்த ஈசுவரர். தாம்: அசை நிலை. உரைத்த-திருவாய் மலர்ந்தருளிச் செய்த. ஆகமத்து-சைவாகமத்தில் கூறப்பெற்ற. உண்மை-மெய்யான வழியில் ஆகுபெயர். ஏ: அசை நிலை. தலை நின்று-தலை சிறந்து நின்று. எம்-அடியேங்களுடைய; இது சேக்கிழார் தம் மையும் பிற தொண்டர்களையும்சேர்த்துக் கூறியது.பிராட்டி -தலைவியாகிய காமாட்சியம்மை. அர்ச்சனை-தம்மை அருச்சனை. புரிவதனுக்கு-செய்வதற்காக. இயல்பில்-இயல் போடு; உருபு மயக்கம். வாழ்-வாழும். திரு-அழகிய, ச்:சந்தி. சேடியரான-தோழிமார்களான, கொம்பு-பூங்கொம்பை. அனார்கள்-போன்ற பெண்மணிகள். அனார்: இடைக்குறை. பூம்பிடகை-மலர்களை வைத்திருக்கும் கூடையை, கொண்டு -எடுத்துக் கொண்டு. அணைய-வந்து சேர. க்:சந்தி. குலவுதங்களிடம் உள்ள மென்-மென்மையாகிய, தளிர்-தளிர் களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். அடியிணைஇரண்டு திருவடிகளாலும். அடி ஒருமை பன்மை மயக்கம். ஒதுங்கி-நடந்து. அம்பிகாவனம் ஆம்- அம்பிகை தவம் புரிந்த காடு ஆகும. திரு-அழகிய வனத்தில்-காட்டில். ஆன-மலர்ந்: திருப்பவையான துா-பரிசுத்தமும். நறும்-நறுமணமும் கொண்ட புது-அன்று அலர்ந்த புதிய மலர்-மலர்களை; ஒருமை பன்மை மயக்கம். கொய் தாள்-காமாட்சி யம்மை

பறித்தாள். .

பெண்களின் திருவடிகளுக்குத் தளிர்கள் உவமை, தளிர்போல் மெல்லடியாள்.' என்று சுந்தரமூர்த்தி

நாயனாரும், தளிர் தயங்கும்மே அடியே." என்று இளம் பெருமான் அடிகளும், கற்பகப் பூந்தளிரடி.’, 'பூந்துணர் மலர்ந்த போலும் நற்பதம் பொலிவு காட்ட" என்று சேக் கிழாரும், அடிமானத்தாள்புரை தளிர்.’’ (வனம்புகு படலம், 17), "குளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்ச நிமிர் சீறடியளாகி. (சூர்ப்பணன்கப் படலம், 31) என்று கம்பரும் பாடியவற்றையும் காண்க. -