பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 - பெரிய புராண விளக்கம்-5

வ்ளாகி நெடுங்காலம் இருக்கும் நன்மைகள் யாவும் பெருகி உண்டாகும் வண்ணம் வரங்களை வழங்கியருளும் பரம்பொருளாகும் இமாசல அரசனுடைய புதல்வியும். பூங்கொடியைப் போ ன் றவ ளு ம் ஆகிய காமாட்சி அம்மை ஒப்பு இல்லாத விதத்தில் தன்னுடைய திருவுள்ளத் தில் மலர்ச்சியை அடைந்த பெரிய பக்தியோடு தன்னுடைய தலையைத் தரையில் படுமாறு வணங்கி எழுந்து ஏகாம்பரேசு வரருக்குப் புரியும் பூசையை ஒவ்வொரு நாளும் தன்னுடைய திருவுள்ளம் கொள்ளுமாறு அவளுடைய பக்தி பெருகி எழுந்தது. பாடல் வருமாறு: -- * கரம் தரும்பயன் இதுவென உணர்ந்து கம்பம் மேவிய உம்பர்நாயகர்பால் கிரந்த காதல்செய் உள்ளத்த ளாகி

கீடு கன்மைகள் யாவையும் பெருக வரக்த ரும்பொரு ளாம்மலை வல்லி . மாறி லாவகை மலர்ந்தபே ரன்பால்

சிரம்ப ணிந்தெழு பூசை நாடொறும்

திருவுளம்கொளப் பெருகிய தன்றே.' கரம்-தன்னுடைய கைகள்; ஒருமை பன்மை மயக்கம். தரும்-வழங்கும். பயன்-பிரயோசனம். இது என-இது என்று. என: இடைக்குறை. உணர்ந்து-தெரிந்து கொண்டு. கம்பம்ஏகம்பம் ஆகிய காஞ்சீபுரத்தில். மேவிய-விரும்பித் திருக் கோயில் கொண்டு எழுந்தருளிய, உம்பர்-தேவர்களினுடைய; ஒருமை பன்மை மயக்கம். நாயகர் பால்-தலைவராகிய ஏகாம் பரேசுவரரிடத்தில், நிரந்த-அமைந்துள்ள. காதல்-விருப் பத்தை செய் புரியும், உள்ளத்தளாகி-திருவுள்ளத்தைப் பெற் றவளாகி, நீடு.நெடுங்காலம் இருக்கும். நன்மைகள்-நலங்கள்; என்றது செல்வம், பக்தி, தோழிகள், பூசைக்கு உரிய பொருள் கள் முதலியவற்றை, யாவையும்-யாவும். பெருக-பெருகி உண்டாகும் வண்ணம். வரம்-வரங்களை ஒருமை பன்மை