பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 337

ததுமாகிய ஆண் யானையை உரி-உரித்து அதன் தோலைத் தம்முடைய போர்வையாக: ஆகு பெயர். புனைந்த-அணிந்து கொண்ட தம்-தம்முடைய மேனி-திருமேனியை. குழைந்து -குழைவை அடைந்திருக்கும் வண்ணம். விழைந்த-அதனை விரும்பிய, கொள்கையினார்-எண்ணத்தை உடையவராகிய ஏகாம்பரேசுவரர். காட்டினார்-காட்டியருளினார்.

கொங்கைக்கு மலை உவமை: தொழுமணியேர் நகை யார் கொங்கைக் குன்றிடைச்சென்று.”(நீத்தல் விண்ணப்பம், 131) என்று மாணிக்க வாசகரும், தனக்குன்றம்.' என்று சேரமான் பெருமாள் நாயனாரும், கொங்கை மலையார் கலை போய்.” என்று பரணதேவ நாயனாரும், ஏரிள மென்முலைப் பொன்மலையாட்டி, என்று இளம் பெரு மான் அடிகளும், கொங்கைச் சிறுவரை. ’’ என்று பெரி யாழ்வாரும், 'பொன்னிலங்கு முலைக் குவட்டில்.’’ என்று திருமங்கை யாழ்வாரும், "காரார் வரைக் கொங்கை’, :தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும், என்னும் இவையே முலையா வடிவமைந்த அன்ன நடைய அணங்கே.’’ என்று திருமங்கையாழ்வாரும், அலை நீராடை மலை முலையாக." (சிலப்பதிகாரம், 5:1) என்று இளங்கோவடிகளும், "மாநில மடந்தை, அணி முலைத்துயல் வரும் ஆரம்போல.” (சிறுபாணாற்றுப்படை, 1-2) என்று நல்லூர் நத்தத்தனாரும், "சோலை மலையோ டிரண்டாய். மேதினியாள் கொங்கைநிகர் வேங்கடமே. (திருவேங்கட மாலை), கொங்கையே பரங்குன்றமும் கொடுங் குன்றும்.” (திருவிளையாடற்புராணம், நகரப் படலம், 2) என்று வேறு புலவர்களும், மலை மிசைத்தடத்துகு மழைக்கண் ஆலி போல், முலை முகட்டுதிர்ந்தன. நெடுங்கண்முத்தினம்.” (மிதிலைக் காட்சிப்படலம், 48),"முலைக் கோட்டு விலங்கு." (குலமுறை கிளத்து படலம், 15), குங்கும மலைக் குளிர் பனிக்குழுமி என்னத், துங்கமுலையிற்றுகளுறச் சிலர்துயின் றார்." (தைலமாட்டுப் படலம், 66), கோடுகள் மிடைந்த