பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 343

மகிழ்ச்சியை அடையும் வண்ணம். ஏ: அசைநிலை. காட்டி -அவளுக்குக் காண்பித்தருளி. முன் அவளுக்கு முன்னால். நின்று-எழுந்தருளி நின்று:கொண்டு. வரங்கள் வேண்டுவநீ உனக்கு வேண்டியவைகளாகிய வரங்களை, கொள்க. பெற்றுக் கொள்வாயாக என்றுகளன. அருள-ஏகாம்பரேசுவ ரர் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, வேதகாரணராயஇருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களையும் வெளிப்படுத்தும் கா, ர ண, ரா.கி ய. வேத ஒருமை பன்மை மயக்கம். ஏகம்பர்-ஏகாம்பரேசுவரர். விரை-நறுமணம் கமழும். மலர்-செந்தாமரை மலர்களைப் போல; ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. செய்ய-சிவந்தவையும்; வினையாலனை யும் பெயர். தாமரை-தாமரை மலர்களைப் போன்றவையும்: ஒருமை பன்மை மயக்கம். க்சந்தி. கழல்-வெற்றிக் கழலைப் பூண்டவையும் ஆகிய திருவடிகளின் ஆகுபெயர். கீழ்-கீழே. ஏதம்-குற்றம். நீங்கிய-அகன்ற பூசனை-தான் செய்யும் பூசை. முடிந்தது-நிறைவேறியது. இன்மை-இல்லாமையை. தான் என்றது காமாட்சி அம்மையை. அறிவிப்பதற்குஅந்த ஈசுவரருக்குத் தெரிவிக்கும் பொருட்டு. இறைஞ்சி. அந்த ஈசுவரரை வணங்கி. -

பெண்மணிக்கு அமுதம் உவமை: 'அமுதமதாக அழகிய மேனி. என்று திருமூலரும், ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய, சீரார் தெரிவைப் பிராயத்தாள்.' என்று சேர. மான் பெருமாள் நாயனாரும், ஆவியே அமுதே என நினைந்துருகி அவரவர் பணைமுலை துணையா." என்று திருமங்கையாழ்வாரும், இன்னமிர் தன்ன சாயல்.’, "அமிர்த மன்னாளை எய்தி." (சீவக சிந்தாமணி, 8, 268) என்று திருத்தக்க தேவரும், 'அன்னே தேனே ஆரமிர்தே என்றடி போற்ற..” (மிதிலைக் காட்சிப் படலம், 30). :அமிழ் தினைச்சுவை செய்தென்ன அழகினுக்கழகு செய் தார்.', 'ஆரமிழ்தும் நாண.கன்னி அமிழ்தத்தை எதிர்