பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் - 345

போன்ற திருமுகத்தைப் பார்த்து அந்த மலர்ந்த ஒற்றைக் கண்ணைப் பெற்ற தம்முடைய நுதலின் மேல் திரிபுண்டர மாக அணிந்த திருநீற்றை உடைய அந்த ஏகாம்பரேசுவரர், "உன்னுடைய பூசை எக்காலத்திலும் நம்மிடத்தில் என்றைக் கும் முடிவை அடைவது இல்லை' என்று அந்த ஏகாம்பரேசு வரர் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. பாடல் வருமாறு:

'அண்டர் நாயகர் எதிர்கின்று கூறும்

அளவி னால்அஞ்சி அஞ்சலி கூப்பிக் கொண்ட இற்றைஎன் பூசனை இன்னும்

குறைகி ரம்பிடக் கொள்க. என்றருள வண்டு வார்குழல் மலைமகள் கமல

வதனம் நோக்கிஅம் மலர்க்கண்நெற் றியின்மேல் முண்ட கீற்றர், கின்பூசனை என்றும் . . . .

முடிவ தில்லைநம்பால் 'என மொழிய,’’ இந்தப் பாடல் குளகம், அண்டர்-எல்லாத் தேவர்களுக் கும்; ஒருமை பன்மை மயக்கம். நாயகர்-தலைவராகிய ஏகாம் பரேசுவரர். எதிர்-காமாட்சி அம்மைக்கு எதிரில், நின்று. நின்று கொண்டு. கூறும்-திருவாய் மலர்ந்தருளிச் செய்யும். அளவினால் - அளவால். அஞ்சி-அச்சத்தை அடைந்து. அஞ்சலி-காமாட்சி அம்மை தன்னுடைய திருக்கரங்களைத் தன்னுடைய தலையின் மேல் வைத்து அஞ்சலியாக, கூப்பிகுவித்துக் கும்பிட்டு விட்டு. க்சந்தி, கொண்ட-அடியேன் மேற் கொண்ட இற்றை-இன்றைத் தினத்தில் என்அடியேன் புரிந்த. பூசனை-பூசை. இன்னும்-இனியும். குறைகுறைபாடு. நிரம்பிட-நிறையுமாறு. க்:சந்தி. கொள்கபெற்றுக் கொள்வாயாக. என்று-என. அருள-ஏகாம்பரேசு வரர் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, வண்டு-வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். வார்-நீளமான, குழல்-கூந்தலைப் பெற்ற. மலைஇமாசல அ ர ச னு ைட ய; திணை மயக்கம். மகள்