பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவாட்டாய நாயனார் புராணம் 31:

திருத்தொண்டினை அடியேன் அடியேனுடைய அறிவுக்குத் தேரிந்த வண்ணம் பாடத் தொடங்கினேன். பாடல் வருமாறு: o

" முன்னிலை கமரே ஆக முதல்வனார் அழுது செய்யச்

செக்கெலின் அரிசி சிந்தச் செவியுற வடுவின் ஓசை அந்நிலை கேட்ட தொண்டர் அடியினை தொழுது

வாழ்த்தி மன்னும்ஆ னாயர் செய்கை அறிந்தவா வழுத்த

லுற்றேன்." இது மேல் வரும் ஆனாய நாயனார் புராணத்திற்குத் தோற்றுவாயாகச் சேக்கிழார் பாடியருளியது. முன் நிலைதமக்கு முன்னால் உள்ள இடம். கமர்-தரைப் பிளப்பு. ஏ: அசை நிலை. ஆக-ஆக இருக்க. முதல்வனார்-எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவராகிய மகா தேவர். அமுது செய்ய-திருவமுது செய்யும் பொருட்டு. ச்:சந்தி. செந்நெலின் *தாம் சுமந்து கொண்டு வந்த சம்பா நெற்களை; ஒரும்ை பன்மை மயக்கம். நெலின்:இடைக்குறை. அரிசி-குத்திய அரிசிகள்; ஒருமை பன்மை மயக்கம். சிந்த-தரையில் விழ, ச் சத்தி. செவி-தம்முடைய காதுகளில், ஒருமை பன்ம்ை மயக்கம். உற-விழுமாறு. வடுவின்-மாவடுக்களைக் கடிக்கும்: ஒருமை பன்மை மயக்கம். ஒசை-விடேல் விடேல் என்னும் சத்தத்தை. அந்நிலை-அந்த நிலையில். கேட்ட தொண்டர் -கேட்ட திருத்தொண். ராகிய அரிவாட்டாய் நாயனாரு டைய. அடியிணை-இரண்டு திருவடிகளையும். அடி:ஒருமை பன்மை மயக்கம். தொழுது-வணங்கி. வாழ்த்தி-வாழ்த்துக் களைக் கூறிவிட்டு. மன்னும்-நிலைபெற்ற புகழோடு விளங்கும். ஆனாயர்-ஆனாய நாயனார். செய்கை-புரிந்த திருத்தொண்டினை. அறிந்தவா-அடியேனுடைய அறிவுக்குத் தெரிந்த வண்ணம். வழுத்தலுற்றேன்-பாடத் தொடங்: கினேன். . . . . .