பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 பெரிய புராண விளக்கம்- --

புதல்வியாகிய காமாட்சி அம்மையினுடைய, கமல-செந்தா மரை மலரைப் போன்ற... வதனம்-முகத்தை. நோக்கி-அந்த ஏகாம்பரேசுவரர் பார்த்தருளி. அம்-அழகிய, மலர்மலர்ந்த, க்சந்தி. கண்-ஒற்றைக் கண்ணைப் பெற்ற. நெற்றியின் மேல்-தம்முடைய நுதலின் மீது, முண்ட-திரிபுண்டரமாகிய, நீற்றர்-விபூதியை அணிந்த அந்த ஈசுவரர்.'நின்-உன்னுடைய. பூசனை-பூசை, என்றும்.என்றைக்கம் நம்பால்-எம்மிடத் தில். முடிவதுஇல்லை-முடிந்து போவது:அன்று. என-என்று; இடைச்குறை, மொழிய-அந்த ஈசுவரர் திருவாய் மலர்ந் தருளிச் செய்ய.

பிறகு வரும் 69-ஆம் பாடலின் கருத்து வருமாறு: ஒப்பு ஒன்றும் இல்லாத இந்தக் காமாட்சி அம்மை புரிந்த பூசை என்றைக்கும் நிலைபெற்று விளங்குமாறு அடியேங்களுடைய தலைவனாகிய ஏகாம்பரேசுவரன் மகிழ்ச் சியை அடைந்து அந்தப் பூசையை ஏற்றுக் கொண்டருளி, 'முடிவு இல்லாத இந்தச் சிவத்தலமாகிய காஞ்சீபுரத்தில் எல்லா வ .ைக யா ன.மு.ப் பத் தி ர ண் டு தருமங்களையும் அடியேன் புரியுமாறு. திருவருளைத் தேவரீர் வழங்க வேண்டும்; வேறாகப் புரியும் தொழில்கள் தேவரீருடைய திருவடிகளை மறந்து வாழ்தல் அகல இந்தக் காஞ்சீபுரத்தில் வாழும் மக்கள். தங்களுக்கு விருப்பமான செயல்களைப் புரிந் தாலும் அவர்கள் பெறும் பேறாகப் பெரிய தவத்தைச் செய் வதனால் உண்டாகும் பிரயோசனத்தை தேவரீர் வழங்கி யருள அந்தப் பயனை அந்த மக்கள் அடையவும் வேண்டும்" -என்று பிறப்புக்களை ஒழிப்பவளாகிய காமாட்சி அம்மை திரு

வாய் மலர்ந்தருளிச் செய்தார்." பாடல் வருமாறு:

" மாறி லாதஇப் பூசனை என்றும்

மன்ன எம்பிரான் மகிழ்ந்து கொண்டருளி ஈறி.லாதஇப் பதியினுள் எல்லா

அறமும் யான்செய அருள்செயூ வேண்டும்.