பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356) பெரிய புராண விளக்கம்-3

நிலை பெற்று விளங்கும் உயிர்கள் யாவும் பலவாகப் பெருகும் வண்ணம் வி ரு ம் பு ம் காதலோடு நெடுங்காலம் வாழும் வாழ்க்கையைப் புண்ணியமாகிய அழகிய காமக்கோட்டத் தில் விளங்குமாறு முப்பதோடு இரண்டு.தருமங்களையும் அந்தக் காமாட்சி அம்மை பாதுகாத்து வருபவள் ஆனாள்.” பாடல் வருமாறு:

எண்ண ரும்பெரு வரங்கள்முன் பெற்றங்.

கெம்பி ராட்டிதம் பிரான்மகிழ்க் தருள மண்ணின் மேல்வழி பாடுசெய் தருளி

மனையறம்பெருக்குங்கருணையினால் கண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க நாடு காதலின் டிேய வாழ்க்கைப் புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப்

பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்.' எண்-கணக்கிடுவதற்கு. அரும்-அருமையாக இருக்கும். பெரு-பெரிய வரங்கள்-வரங்களை. முன்-அந்த ஏகாம்பரேசு வரருக்கு முன்னால். பெற்று-தான் பெற்றுக் கொண்டு. அங்கு -அந்தக் காஞ்சீபுரத்தில். எம்-அடியேங்களுடைய; இது சேக் கிழார். தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. பிராட்டி-தலைவியாகிய காமாட்சி அம்மை. தம்தம்முடைய; இதுவும் மேலே சொன்னவாறு கொள்க. பிரான் -தலைவனாகிய ஏகாம்பரேசுவரன். மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து, அருள-தன்னுடைய திருவருளை வழங்க. மண் -ணின்மேல்-இந்த மண்ணுலகத்தின் மீது வழிபாடு-தன்னை வழிபாட்டை செய்தருளி-புரிந்தருளி. மனை அறம்-இல்லற வாழ்க்கையை. பெருக்கும்-பெருகுமாறு செய்யும். கருணையி னால்-கருணையால், நண்ணும்.இந்தப் பூ மண்டலத்தில் பிறந்திருக்கும். மன்-நிலை பெற்று விளங்கும். உயிர்-உயிர்கள்: ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: மக்கள்,விலங்குகள், பறவைகள், ஊர்வன, புழுக்கள், பூச்சிகள், நீர் வாழ்:பிராணி கள் முதலியவை. யாவையும்-யாவும். பல்க-பலவாகப் பெரு