பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் –34):

கும் வண்ணம். -நாடு-விரும்பும். காதலின் விருப்பத்தோடு. நீடிய-நெடுங்காலம் வாழும். வாழ்க் ைக-வாழ்க்கையை" ப்:சந்தி. புண்ணிய-புண்ணியமாகிய, த்:சந்தி, திரு-அழகிய. க்:சந்தி. காமக் கோட்டத்து-காமக் கோட்டமாகிய காமாட்சி அம்மையினுடைய திருக்கோயில் விளங்கும் காஞ்சீபுரத்தில்; இட ஆகுபெயர்.ப்:சந்தி: பொலிய-விளங்கு மாறு. முப்பதோடு -முப்பதுடன். இரண்டு அறம்-இரண்டு தருமங்களையும்: -ஒருமை பன்மை மயக்கம். புரக்கும்-அந்தக் காமாட்சி அம்மை பாதுகாத்து வருபவள் ஆனாள்.

பிறகு வரும் 72-ஆம் பாடலின் கருத்து வருமாறு: கணக்கு இல்லாத நெடுங்காலமாகத் தவத்தைப் புரிந்த தருமங்களைப் பாதுகாக்கும் பெருமையைப் பெற்ற செல்வி வாகிய காமாட்சி அம்மை இந்த உலகமாகும், அழகிய திரு மாளிகைக்கு ஏற்றி வைக்கும் திருவிளக்கு இந்தப் பூமண்ட லத்தில் வந்து .ே ச ரும் பிரயோசனத்தைத் தெரிவிக்கும் பொருட்டு ஓங்கி மலரும் அன்று மலர்ந்த மலர்கள் மூன்றோடு ஒன்றும் அமையுமாறு வருடத்துக்கு ஒரு த.ட ைவ புரியும் நெடுங்காலமாக உள்ள பழமையினால் நிரம்பியுள்ள பெரிய உலகம் மலர்ந்த பெருமையைப் பெற்று விளங்கும் அழகிய காமக் கோட்டமாகிய காமாட்சியம்மையின் திருக்கோயில் விளங்கும் காஞ்சீபுரத்தில் அமைத்து வைத்த நல்ல முப்பத்தி ரண்டு தருமங்கள் நிலைபெற்று விளங்குமாறே அந்தக் காஞ்சீபுரம் நிலைபெற்று விளங்கும். பாடல் வருமாறு:

" அலகில் நீள்தவத் தறப்பெரும் செல்வி

அண்ட மாம்திரு மனைக்கிடும் தீபம் உலகில் வந்துறு பயனறி விக்க

ஓங்கும் காண்மலர் மூன்றுடன் ஒன்று நிலவ ஆண்டினுக் கொருமுறை செய்யும்

நீடு:தொன்மையால் நிறைந்தபே ருலகம் மலர் பெரும்திருக் காமக்கோட் டத்து.

வைத்த கல்லறம் மன்னவே மன்னும்: