பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 355

முப்பத்திரண்டு தருமங்களை ஒருமை பன்மை மயக்கம். புரிந்து-செய்தருளி. அளிக்கும். அவற்றைப் பாதுகாத்து. வரும். அன்னைதன் தாயாகிய காமாட்சியம்மையினுடைய. தன்: அசைநிலை. திரு.அழகியக்:சந்தி.காமிக்கோட்டத்தில்காமக்கோட்டமாகிய காமாட்சி அம்மை-எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்கு, உருபு மயக்கம். வந்து-வந்து சேர்ந்து. சந்திர சூரியர்-சந்திரனும் சூரியனும். மீது-அந்தத் திருக். கோயிலுக்குமேல். வ்ழிக்கொளாது.செல்லாமல். கொளாது, இடைக்குறை. அதன்-அந்தக் கோயிலுக்கு. மருங்கு-பக்கத்தில் போதவினால்.செல்லுவதால். சந்தம்-அழகைப் பெற்ம. - மாதிரம்-திசைகள்; ஒருமை பன்மை மயக்கம். மயங்கி-மயக்க கத்தைத் தந்து, எம்மருங்கும். எந்தப் பக்கத்திலும். சாயைஅந்த இரண்டு கிரகங்களின் நிழல். மாறியதன்-மாறிப் போனதாகிய திசை மயக்கம்-திசை மயங்கும் நிலை. இந்த மா-இந்தப் பெரிய நிலத்தவர்-பூமண்டலத்தில் வாழும். மக்கள்; ஒருமை பன்மை மயக்கம். எலாம்-எல்லாரும்: இடைக்குறை. காண-பார்க்குமாறு. என்றும்-என்றைக்கும். உள்ளது-இருப்பதாகிய ஒன்று-ஒரு தீர்த்தம். இன்றும்-இன் றைக்கும். அங்கு-அந்தக் காஞ்சீபுரத்தில். உளது-இருக்கிறது: இடைச்குறை. ஆல்: ஈற்றசை நிலை.

பிறகு வரும் 75-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: கன்னியாகிய துர்க்கையினுடைய நல்ல நீண்டகாலமாக உள்ள பாதுகாப்பைப் பெற்ற எல்லையில் காஞ்சியாறு ஆகும் அழகிய ஆற்றினுடைய கரையின் பக்கத்தில் தம்முடைய தலையில் பிை றச்சந்திரனை அணிந்தவராகிய ஏகாம்ப்ரேசு. வரர் விழைந்து எழுந்தருளியிருக்கும் அழகிய பெருமையைப் பெற்ற புகழைக் கொண்ட ஒர் இருப்பிடத்தில் விளங்கி நிலை. பெற்று விளங்கும் வெம்மையைப் பெற்ற சூரியன் வானத்தின் மேல் உதயமாகும் சமயத்திலும் மீண்டும் மேற்குக்கடலிட்த். தில் விழுந்து அத்தமிக்கும் சமயத்திலும் தங்களுடைய நிழல் பிரியாமல் உள்ள வளப்பத்தைக் கொண்ட காஞ்சித்தானம்,