பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனாய நாயனார் புராணம்

Quາກົມ புராணத்தில் - மூன்றாவதாக உள்ள இைை. மலிந்த சருக்கத்தில் ஏழாவதாக விளங்குவது. ஆனாய நாயனார் புராணம். அதில்வரும் முதற் பாடலின் கருத்து வருமாறு: A 2 - - - . . . . பக்கத்தில் நறுமணம் கமழ்ந்து விளங்கும் மலர்கள் மலர்ந்த பல்வகை மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழி லுக்கு மேல் வானத்தில் உள்ள சந்திரன் வந்து ஏறித் தவழ, -வும், வயல்களில் அரிந்து கொண்டு வந்த நெற்கதிர்களைப் பரப்பியிருக்கும் பண்ணையின் எல்லையில் வண்டுகள் வந்து மொய்க்கவும், கொண்டு வந்து இட்டவையாகிய தெற்கதிர்களை அடுக்கிய போர்களின் மேல் மேகங்கள் அவை உயரமாக இருப்பதனால் களைப்பை அடைந்து ஏறவுமாக அமைந்து நெடுங்காலமாக விளங்கும் நீர்வளம் நிலவளம், செல்வ வளம், நன்மக்கள் வளம் முதலியவற்றைப் பெற்றுத் திகழ்வது மேல்மழ நாடு என்று கூறப்படும் நதி ஒடும் நாடு. பாடல் வருமாறு:

'மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச் சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற or. ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற டுே வளத்தது மேல்மழ நாடெனும் நீர்நாடு."