பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 பெரிய புராண விளக்கம்-5

எழுத்தாணியும், எந்நிலத்தினும்-எந்த வகையாகிய நிலங்களி லும்;ஒருமை பன்மை மயக்கம். காண்பரும்-பார்ப்பதற்கு அரு மையாக இருக்கும். இறவாத்தானம் என்ற-இறவாத் தானம் என்று கூறப் பெற்ற, இவை-இந்தத் தலங்கள். என்றிவைஎன்ற இவை: தொகுத்தல் விகாரம். இயன்பினில்-தங்களுக் குரிய இயல்புகளோடு; ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக் கம். உடைத்து-அந்தக் காஞ்சீபுரம் உடையது. ஆல்:ஈற்றசை திலை.

பிறகு வரும் 78-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "மக்களுக்கு உண்டாகும் தீய வினைகளாகிய பாவங்கள் யாவற்றையும் போக்கி ஆனந்தத்தையே வழங்கும் புண்ணிய தீர்த்தம், விரும்பினவர்களுக்கு இட்ட சித்தியாகத் திகழும் இட்ட சித்தி தீர்த்தம், நல்ல மங்கல தீர்த்தம், நெடுங்கால மாக உள்ள பாதுகாப்பைப் பெற்ற தீர்த்தங்கள் மூன்று இந்த உலகத்தில் விளங்கிய சாருவதீர்த்தமும் முதலாக உள்ளவை அந்தக் காஞ்சீபுரத்தில் நெடுங்காலமாக உள்ள தீர்த்தங்கள் கணக்கு இல்லாதவையும் உள்ளன; அவற்றில் தேவலோகத்தில் வாழும் தேவர்கள் நீராடுதலை விட மாட் டார்கள்." பாடல் வருமாறு: -

"ஈண்டு தீவினை யாவையும் நீக்கி

இன்ப மேதரும் புண்ணிய தீர்த்தம் வேண்டி னார்தமக் கிட்டசித் தியதாய்

விளங்கு தீர்த்தம்கல் மங்கல தீர்த்தம் நீண்ட காப்புடைத் தீர்த்தம்மூன் றுலகில்

நிகழ்ந்த சாருவ தீர்த்தமும் முதலா ஆண்டு நீடிய தீர்த்தம் எண்ணிலவும்

அமரர் காட்டவர் ஆடுதல் ஒழியார்.' ஈண்டு-மக்களுக்கு உண்டாகும். தீவினை-தீய வினை களாகிய பாவங்கள்: ஒருமை பன்ம்ை மயக்கம். யாவையும். யாவற்றையும். நீக்கி-போக்கி. இன்பமே.ஆனந்தத்தையே. தரும்-வழங்கும். புண்ணிய தீர்த்தம்-புண்ணிய தீர்த்தம் என்பதும். வேண்டினார் தமக்கு-விரும்பினவர்களுக்கு: