பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனாயநாயனார் புராணம் - 33.

மாடு-பக்கத்தில். விரை-நறுமணம். ப்:சந்தி. பொலிகமழ்ந்து விளங்கும். சோலையின்-மல்ர்கள்.மலர்ந்த பல்வகை மரங்கள் வளர்ந்து நிற்கும் பூம்பொழிலுக்கு மேல். அந்த மரங்களாவன: வாகை மரம், வேங்கை மரம், மகிழ மரம் கடம்ப மரம். பூவரச மரம், விளா மரம், வில்வ மரம், பவள மல்லிகை மரம், வேப்ப மரம் முதலியவை. வான்-வானத்தில். உள்ள மதி-சந்திரன். வந்து ஏற-வந்து ஏறித் தவழவும். ச்: சந்தி. குடு-வயல்களிலிருந்து அரிந்து கொண்டு வந்த நெற். கதிர்களை; ஒருமை பன்மை மயக்கம். பரப்பிய-பரப்பியுள்ள். பண்ணை-பண்ணையினுடைய. வரம்பு-எல்லையில். சுரும்பு. வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். ஏற-வந்து மொய்க்க வும். ஈடு-கொண்டுவந்து இட்டவைகளாகிய நெற்கதிர்களை: ஒருமை பன்மை மயக்கம். பெருக்கிய-பெருக அடுக்கிய, போர் களின்-போர்களின் மேல். மேகம்-மேகங்கள்; ஒருமை பன்மை மயக்கம். இளைத்து அவை உயரமாக இருப்பதனால் களைப்பை அடைந்து. ஏற-ஏறவுமாக அமைந்து. நீடு-நெடு; காலமாக விளங்கும். வளத்தது-நீர்வளம், நிலவளம், செல்வ. வளம், நன்மக்கள் வளம் முதலிய வளங்களைப் பெற்றுத் திகழ்வது. மேல்மழநாடு எனும்-மேல்மழ நாடு என்று கூறப் படும். எனும்:இடைக்குறை. நீர்நாடு-ஆற்றின் நீர் ஓடும்நாடு.

பிறகு வரும் 2-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

"ஆடையில் உள்ள கொய்ச்சங்களின் அடியில் பெண் குறிகளைப் பெற்ற உழவர் குலப் பெண்களாகிய பள்ளிகள் எண்ணெய் தடவிய கூந்தல்களாகிய மையைப் போன்ற கருமையான இடங்களில் சார்ந்து துயில் கொள்பவை: மென்மையான சிறகுகளைக் கொண்ட வண்டுகள்; நறுமணம் கமழும் தாமரை மலர்களில் உறங்குபவை நீளமான கயல் மீன்கள்; மலர்கள் மிகுதியாக மலர்ந்த தேமாமரங்கள் வளர்ந்து நிற்கும் பூஞ்சோலையில் அந்த மரங்களினுடைய நறுமணத்தையும் குளிர்ச்சியையும் உடைய நிழலில் தூங்கு. பவை கருமையான நிறத்தைக் கொண்ட எருமை மாடுகள்.” பாடல் வருமாறு: ---