பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார்.புராணம் 369.

தேவ சாதியினர். திகழ்ந்து-விளங்கி, மன்னுவார்-நிலை பெற்றுக் காஞ்சீபுரத்தில் வாழ்வார்கள்: ஒருமை பன்மை மயக்கம். செண்டு-குதிர்ைச் சம்மட்டியாகிய சவுக்கை. கை-தம்முடைய திருக்கரத்தில் ஏந்தி-ஏந்திக் கொண்டு. வித்தக-நன்றாக ஓடும் கலையில் வல்ல. க்:சந்தி. கரி.யானை யின் மேற்கொளும்-ஏறிக் கொண்டு எழுந்தருளும். கொளும்: இடைக்குறை. காரி-ஐயனார்; ஒருமை பன்மை மயக்கம். மேவு-சேரும். செண்டு அனை-செண்டாயுதம் அடையும். வெளியும்-குதிரை வையாளியாக ஒடும் வெளியிடமும், ஒன்று உளது-காஞ்சீபுரத்தில் ஒன்று இருக்கிறது. உளது: இடைக் குறை. ஆல்: ஈற்றசை நிலை.

அடுத்து வரும் 83-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அவ்வாறு காஞ்சீபுரத்திற்கு வந்து சேர்ந்த சித்தர்கள் முதலியவர்கள் தங்களுடைய உருவங்கள் மறைய வேறாக உள்ளவர்களைத் தாங்கள் பார்க்கும் இடம் ஒன்று காஞ்சீ புரத்தில் இருக்கிறது; தங்களுடைய திருவுள்ளங்களை யோகத் தில் செலுத்தும் முனிவர்களும், யோகினிகளும் வந்து சேர்ந்தி ருக்கும் யோகபீடமும் ஒன்று எல்லாக் காலத்திலும் அந்தக் காஞ்சீபுரத்தில் இருக்கிறது; முடிவு இல்லாத முப்பத்திரண்டு தருமங்களைப் பாதுகாப்பவளாகிய காமாட்சியம்மை எழுந் தருளியிருக்கும் ஆலயமான போக பீடமும் அந்த நகரத்தில் இருப்பது ஆகும்; அடியேங்களுடைய தந்தையாரைப் போன்றவராகிய ஏகாம்பரேசுவரர் மகிழ்ச்சியை அடைந்து கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் காஞ்சீபுரத்தில் நீள மாக உள்ள எல்லையின் வரம்பை இந்த அளவைப் பெற்றது என்பதை யார் தெரிந்து கொள்வார்?’ பாடல் வருமாறு:

வந்த டைந்தவர் தம்முரு மாய -

- மற்று ளாரைத்தாம் காண்பிடம் உளது:

சிங்தை யோகத்து முனிவர்யோ கினிகள்

சேரும் யோகபீ டமும் உள. தென்றும்: