பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கு றிப்புத் தொண்ட நாயனார் புராணம் 373.

பொறியாகிய புலியைப் பெருமையைப் பெற்று விளங்கும். இமய மலையின் மே ல் .ெ ப ா றி த் து வைக்கும் பொருட்டு அந்த மலைக்கு அடியேன் செல்லுவேன் என்று. அந்த மன்னன் காமாட்சி அம்மையிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்ட தலம் இந்தக் காஞ்சீபுரம்; இந்தக் காஞ்சி மாநகரத்தினுடைய வளப்பத்தைப் போய் வேடனுக்கு முன்னால் பார்த்துக் கூறத் திருத்தமாக அமைந்த நான்கு காதங்கள் உள்ளிட வகுத்து மலையைப் போல உயரமாக விளங்கும் திருமதிலை அந்தக் காஞ்சீபுரத்தினைச் சுற்றி, உயரமாகக் கட்டிப் பல வகையான குடிமக்களை அந்தக் கரிகாற் பெருவளத்தான் குடிகளாக இருக்குமாறு புரிந்த மேற் கோளோடு அந்தக் காஞ்சீபுரம் திகழும். பாடல்: வருமாறு: -

' என்றும் உள்ள இந் நகர்கலி யுகத்தில்

இலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன் வன்தி றற்புலி இமயமால் வரைமேல் - வைக்க ஏகுவேன் தனக்கிதன் வளமை சென்று வேடன்முன் கண்டுரை செய்யத்

திருந்து காதம் நான்குட்பட வகுத்துக் குன்று போலுமா மதில்புடை போக்கிக்

குடியி ருத்தின கொள்கையின் விளங்கும்.’’ என்றும்-எல்லாக் காலத்திலும். உள்ள-அழியாமல் இருப் பதாகிய. இந்நகர்-இந்தக் காஞ்சி மாநகரம். கலியுகத்தில்இப்போது நடைபெறும் கலியுகத்தில். இலங்கு-ஒளியை, விட்டு விளங்கும். வேல்-வேலாயுதத்தை ஏந்தியிருக்கும். கரி காற் பெருவளத் தோன்-கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழச் சக்கரவர்த்தி, வன்-வலிமையைப் பெற்ற திறல்-ஆற் றலைக் கொண்ட புலி-தன்னுடைய அடையாளப் பொறி. யாகிய புலியின் உருவத்தை ஆகு பெயர். இமய மால் வரை. மேல்-பெருமையைப் பெற்ற இமய மலையின் மீது வைக்க

பே-24,