பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 375

வேதங்களைக் கானம் செய்யும் கானம் கேட்கும் இடமாகிய தெய்வத் தன்மையையும் வளமையைப் பெற்ற காஞ்சி என் னும் அணிகலத்தை அணிந்து கொண்டிருக்கும் பெண் குறி யைப் பெற்றவளும், இமாசல அரசனுடைய புதல்வியும், பூங் கொடியைப் போன்றவளும் ஆகிய காமாட்சி அம்மை பாதுகாக்க வளர்கின்ற கருணையாகிய சமுத்திரம் இந்த உலகத்தைச் சுற்றியிருப்பதை ஒக்கும். பாடல் வருமாறு:

தண்காஞ்சி மென்சி னைப்பூம் கொம்பர் ஆடல் - சார்ந்தசைய அதன்மருங்கு சுரும்பு தாழ்ந்து பண்காஞ்சி இசைபாடும் பழன வேலிப்

பணைமருதம் புடையுடைத்தாய்ப்பாரில் நீடும் திண்காஞ்சி நகர்நொச்சி இஞ்சி சூழ்ந்த -

செழுங்கிடங்கு திருமறைகள் ஒலிக்கும் தெய்வ வண்காஞ்சி அல்குல்மலை வல்லி காக்க

வளர்கருனைக் கடல்உலகம் சூழ்ந்தால் மானும்.” தண்-குளிர்ச்சியைப் பெற்ற. காஞ்சி-காஞ்சி மரத்தினு டைய. மென்-மென்மையாக உள்ள சினை-கிளைகளாகியக் ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பூங் கொம்பர்-மலர்கள் மலர்ந்திருக்கும் கொம்புகள். பூ: ஒருமை பன்மை மயக்கம் கொம்பர்: ஒருமை பன்மை மயக்கம். கொம்பர்-கொம்பு, போலி, ஆடல்-அசைந்து ஆடுதலை, சார்ந்து-பொருத்தி, அச்ைய-அசைந்து கொண்டிருக்க. அதன்-அந்தக் கொம்புகளி னுடைய, ஒருமை பன்மை மயக்கம். மருங்கு-பக்கத்தில், சுரும்பு-வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். தாழ்ந்துபறந்து வந்து தங்கி. பண் காஞ்சி-காஞ்சி என்னும் பண்ணா கிய இசை பாடும்-இசைப் பாடலை ரீங்காரம் செய்யும். பழனவயல்களை ஒருமை பன்மை மயக்கம். வேலி-வேலி யாகக் கொண்ட. ப்:சந்தி. பணை-பண்ணைகளை உடைய, ஒருமை பன்மை மயக்கம். பனை: இடைக்குறை. மருதம்மருத நிலம், புடை-பக்கத்தில். உடைத்தாய்-உடையதாகி, ப்:சந்தி. பாரில்-இந்தப் பூ மண்டலத்தில். நீடும்.நெடுங்கால