பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 381

"அந்தக் காஞ்சி மாநகரம் தங்களுக்கு ஒப்பாக வேறு மாடங்களைப் பெறுவது அருமையாக இருக்கும் தங்கத்தைப் பதித்துள்ள மாடங்கள் உயர்ந்து நிற்கும் அழகிய வீதிகளும் நீண்ட வேறு தெருக்களும், காட்டிலிருந்து ஓடிவந்த நதியைப் போல விளங்கும் கடைத் தெருக்களும் வேறு பல விதிகளும் அமைந்த அந்த நகரம் அழகிய மலைகளை இடை இடையே அமைத்துக் கூறுபாடுகள் அமைந்த ஒன்பது கண்டங்களை அல்லாமல் மிகுதியாகக் கொண்டிருக்கும் பல கண்டங்களாக உண்டாகி அத்தகைய வேறு ஒரு மண்ணுலகம் அந்தக் காஞ்சி மாநகரத்தில் இருக்கிறதாகும் என்று கூறுமாறு: திகழ்ந்த பெரிய உலகத்தின் நிலையை அந்த நகரம் அடைந் தது." பாடல் வருமாறு:

  • மாறுபெறல் அரும்கனகமாடம் கீடு

மணிமறுகும் கெடுக்தெருவும் வனத்தில் வந்த ஆறுபயில் ஆவனவி திகளும் மற்றும்

• அமைந்தாகர் அணிவரைகள் கடுவு:போக்கிக் கூறுபடு நவகண்டம் அன்றி மல்கக்

கொண்ட அனே கம்கண்ட மாகி அன்ன வேறொருமண்ணுலகுதனில் உளதாம் என்ன

விளங்கியமாலோகநிலை மேவிற் றன்றே. மாறு-தங்களுக்கு ஒப்பாக. பெறல்-வேறு மாடங்க்ள்ைம் பெறுவது. அரும்-அருமையாக இருக்கும். கண்க-தங்கத்தைப் பதித்திருக்கும். மாடம்-மாடங்கள்:ஒருமை பன்மை மயக்கம். தீடு-உயர்ந்து நிற்கும். மணி-அழகிய. மறுகும்-விதிகளும்:

ஒருமை பன்மை மயக்கம். நெடும்-நீளமாக விளங்கும். தெரு, வுல்-வேறு விதிகளும்: ஒருமை பன்ம்ைமயக்கம். வனத்தில். காட்டிலிருந்து உருபு மயக்கம். வந்த-ஓடி வந்த. ஆறு-நதி களைப் போல: ஒருமை பன்மை மயக்கம். பயில்-விளங்கும். ஆவண. விதிகளும்-பண்டங்களை விற்கும் கடைகள் உள்ள கடைத் தெருக்களும். அந்தப் பண்டங்களாவன: அரிசி,உப்பு. புனி, மிளகாய், வெந்தயம், சீரகம், மிளகு, பயற்றம் பருப்பு