பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.382 ..' .. பெரிய புராண விளக்கம்-3

துவரம் பருப்பு, கொத்துக் கடலை, பெருங்காயம், பலவகை அணிகலன்கள், ஆடவர் உடுத்தும் வேட்டிகள், பெண்மணி கள் உடுத்தும் புடவைகள் முதலியவை. மற்றும்-வேறாக உள்ள வீதிகளும். அமைந்த-அமைந்துள்ள. நகர்-அந்தக் காஞ்சி மாநகரம். அணி-அழகிய. வரைகள்-இமய மலை முதலிய மலைகளை நடுவு இடை இடையே. போக்கி அமைத்து வைத்து. க்சந்தி. கூறு-கூறுபாடுகள்: ஒருமை பன்மை மயக்கம். படு-அமைந்துள்ள. நவ-ஒன்பது. கண்டம்கண்டங்களை ஒருமை பன்மை மயக்கம். அன்றி-அல்லா மல். மல்கக் கொண்ட-பகுதியாகக் கொண்டுள்ள. அநேகம். பல. கண்டம்-கண்டங்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஆகிஆக உண்டாகி. அன்ன-அத்தகைய வேறு ஒருவேறாக உள்ள ஒரு மண்ணுலகு-மண்ணுலகம். தனில்-அந்தக் காஞ்சீ புரத்தில் இடைக்குறை, உளது ஆம் இருக்கிறது ஆகும். என்ன என்று கூறுமாறு. விளங்கிய-திகழ்ந்த, மா-பெரிய. லோக-உலகத்தினுடைய நிலை-நிலையை மேவிற்று-அந்த நகரம் அடைந்தது.அன்று ஏ:இரண்டும் ஈற்றசை நிலைகள். வீதிக்கு ஆறு உவமை: 'யாறு கிடந்தன்ன அகல் நெடும் தெருவின்." (மதுரைக்காஞ்சி,359) என்று மாங்குடி மருதனாரும், ஆறு கிடந்தன்ன் அகல் நெடும் தெருவில்.. (கெடுகல்வாடை, 30). என்று நக்கீரனாரும், யாறு கிம்ந் தன்ன அகனெடுந் தெருவில். (நற்றினை, 200:3) என்று ஆலூர்ப்பல்கண்ணனாரும். யாறெனக் கிடந்த, தெரு. . (மலைபடுகடாம், 481) என்று பெருங் கெளசிகனாரும். 'யாறுகண்டன்ன அகன்கனை விதியுள்.', 'நீத்தியாற்றன்ன. நெடுங்க்ண் விதி." (பெருங்கதை, 2.7:7, 5, 7:23) என்று கொங்கு வேளிரும், ஒராறாய்ச் சேறும்ாய்... மறுகிற் சென்றார். (மிதிலைக் காட்சிப் படலம்,7) என்று கம்பரும் பாடியவற்றைக் காண்க.

அடுத்து உள்ள 90-ஆம் பாடலின் கருத்து வருமாறு , . அந்தக் காஞ்சி மாநகரத்தினுடைப்பகுதிகளின் பக்கங்