பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 38.9

அழகியர்.’’ என்று மாணிக்க வாசகரும், 'ஒழுகு நீர்க்கங்கை அழகரே.” என்று கருவூர்த் தேவரும், 'அமரர் போற்ற அழகன் ஆடுமே.', 'அனல் கைஏந்தி அழகன் ஆடுமே.” என்று திருவாவிய முதனாரும், "சுந்தரக் கூத்தனை.", * சுந்தரக் கூத்தனை என் சொல்லுமாறே.” என்று திரு மூலரும், 'அனல் கைஏந்தி அழகன் ஆடுமே.’’ என்று காரைக்கால் அம்மையாரும், 'கோல மேனியை.” என்று நக்கீர தேவ நாயனாரும், * அழகறிவிற் பெரிதாகிய ஏகம்பர்.’, ‘அமரர் போற்றி அழகா போற்றி.” என்று பட்டி னத்து பிள்ளையாரும், "நீற்றழகர் பாட்டு வந்த.”, 'திரு வாரூர் அணிவீதி அழகர்.’’, ஆமாத்துார் அழகர்.’’ என்று சேக்கிழாரும் பாடியருளியவற்றைக் காண்க.

பிறகு வரும் 93-ஆம் பாடலின் கருத்து வருமாறு: மேகங்கள் தவழும் துவ சங்களைக் கட்டியுள்ள உச்சித் தளங்களை உடையவையும், முழுவதும் பளிங்குக் கற்களால் கட்டி அமைத்த திருமாளிகைகளில் முழுவதும் இந்தப் பூ மண்டலத்தில் சுற்றி உலாவும் ஒப்பு இல்லாத சரங்களும் அசரங்களும் ஆகிய யாவும் அந்தத் திருமாளிகைகளின் ஒளி யினால் நிரம்பியிருப்பதனால் நிறைந்த தவத்தைப் புரிந்த இமாசல அரசனுடைய புதல்வியும், பொம்மையைப் போல அழியாத அழகைப் பெற்றவளும் ஆகிய காமாட்சி அம்மை தம்மைத் தழுவிக் கொண்ட போது அந்த அம்மையினுடைய கொங்கைகள் அழுந்திய தழும்புகளையும், அந்த அம்மை தன்னுடைய திருக்கரங்களில் அணிந்திருக்கும் வளைகளினு டைய தழும்புகளையும் புனைந்திருக்கும் அந்த அம்மையினு டைய கணவராகிய ஏகாம்பரேசுவரர், நான்கு முகங்களைப் பெற்ற பி ர ம .ே த. வ னு க்கு உயிர் க ளு க் கு உடம்புகளை அமைக்கும் பொருட்டு வழங்கியருளும் இந்த உலகத்தில் வாழும் எண்பத்து நான்கு லட்சம் யோனிகள் எல்லாவற்றையும். உண்டாக்கி வைத்துள்ள அருமையும் பெ-25 - , , , ,