பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 401

இமம்மலிய எடுத்தநெடு வரைகள் போல

இலங்குசுதைத் தவளமாளிகைள்ே கோட்டுச் சிமையடையும் சோபான நிரையும் விண்ணும்

தெரிவரிய தூய்மையினால் அவற்றுட் சேர்ந்து தமர்களுடன் இழிந்தேறு மைந்தர் மாதர்

தங்களையும் விசும்பிடைகின் றிழியா நிற்கும் அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வே

றறிவரிதாம் தகைமையன அனேகம் அங்கண்.” இமம்-பனி. மலிய-மிகுதியாக, எடுத்த-படிந்துள்ள. நெடு-உயரமாகிய. வரைகள் போல-இமய மலையையும் வேறு மலைகளையும் போல. இலங்கு-விளங்கும். சுதை-சுண்ணாம் பைத் தீற்றிய த்:சந்தி. தவள-பளிங்குக் கற்களால் கட்டி புள்ள ஒருமை பன்மை மயக்கம். மாளிகை-திருமாளிகை

களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நீள்-உயரமான,

கோட்டு-சிகரங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம்" க்:சந்தி. சிமை-உச்சிகளுக்கு ஒருமை பன்மை மயக்கம். அடையும்-ஏறும். சோபான பேடிகளினுடைய ஒருமை

பன்மை மயக்கம். நிரையும்-வரிசையும். விண்ணும்-ஆகாய மும். தெரிவரிய-வேறுபாடு அறிந்து கொள்வதற்கு அருமை யாக உள்ள தூய்மையினால்-பரிசுத்தத்தால். அவற்றுள் அந்தப் படிகளில். சேர்ந்து-சேர்ந்து கொண்டு. தமர்களுடன்தங்களுடைய பந்துக்களோடு. இழிந்து-இறங்கியும். ஏறு-ஏறி யும் செல்லுகின்ற. மைந்தர்-வலிமையைப் பெற்ற ஆடவர் களையும்; ஒருமை பன்மை மயக்கம். மாதர் தங்களையும்பெண்மணிகளையும். தம்: அசைநிலை. விசும்பிடை நின்றுதேவலோகத்திலிருந்து. இழியா நிற்கும்-இறங்கி வரும்: அமரரையும்-தேவர்களையும்; ஒருமை பன்மை மயக்கம் . அரமகளிர் தமையும்-தெய்வலோகத்துப் பெண்மணிகளை யும். தம்: அசை நிலை. வெவ்வேறு-வேறு வேறாக அறிவரி தாம்-தெரிந்து கொள்வதற்கு அருமையாக இருக்கும். தகை மையன-பான்மையைப் பெற்றவையாகிய, தகுதியைப்