பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் qTTSTb 411

பொற்புடைய தோற்றப் பொலிவைப் பெற்ற வீதிகளும்தெருக்களும். பொலிய-விளங்க. எங்கும்-அந்தக் காஞ்சி மாநகரத்தில் உள்ள எந்தஇடத்திலும். விரை-வாசனையை. செய்-வீசும். நறும்-நறுமணம் கமழும். தொடை-தொடுத் தலைப் பெற்ற, அலங்கல்-மலர் மாலைகளை அணிந்து கொண்டு விளங்கும்; ஒருமை பன்மை மயக்கம், குமரர்அரசிளங்குமரர்கள்; ஒருமை பன்மை மயக்கம். செய்யும். புரியும். வியப்புறு- ஆச்சரியத்தை அடைவதற்குக் காரண மாகிய, செய்-அவர்கள் புரியு. தொழில்-வேலைகளை, ஒருமை பன்மை மயக்கம். கண்டு-பார்த்து. விஞ்சை. வித்தியாதரர்களும் ஒருமை பன்மை மயக்கம். விண் னோர்.தேவலோகத்தில் வாழும் தேவர்களும் ஒருமை பன்மை மயக்கம். நிரை.சேர்ந்து காஞ்சீபுரத்திற்கு வந் திருக்கும் வரிசை. செறியும்-நெருங்கியிருக்கும். விமானவிமானங்களின் மேலும்; ஒருமை பன்மை மயக்கம். ஊர்தி களின் மேலும்-யானை, குதிரை, தேர் முதலிய வாகனங் களின் மேலும். நிலமிசையும்.தரையின் மேலும் பல - முறையும்.பல தடவைகளிலும்; ஒருமை பன்மை மயக்சம். நிரந்து-வரிசையாக நின்றுகொண்டு. நீங்கார்-அந்த இடங் களை விட்டு அவர்கள் போகமாட்டார்கள்; ஒருமை பன்மை மயக்கம். - -

பிறகு வரும் 10-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'ஒளியை வெளி விடும் பல மாணிக்கங்களைப் பதித்திருக் கும் அணிகலன்களை அணிந்து கொண்ட வைசியர்களாகிய மனிதர்கள் மேவிய செல்வத்தின் வளத்தைப் பெருகுமாறு செய்யும் நிதிகள் மிகுதியாக உள்ள இடங்களில் அமைந்திருக் கும் அழகிய கடைகளைக் கொண்ட பெரிய நகரங்கள் எல்லா வற்றிலும் அழகைப் பெற்ற பண்டங்களின் வகைகள் மிகுதி யாக இருத்தலால், கயிலாய மலையில் எழுந்தருளியிருக்கும் கயிலாச பதியாராகிய ஏகாம்பரேசுவரர் எழுந்தருளியிருக் கும்.காஞ்சீபுரத்தில் விளங்கும் பல திருக்கோயில்களும், திரு