பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4! 2 பெரிய புராண விளக்கம்-இ

ஏகம்பமாகிய ஏகாம்பரேசுவரருடைய ஆல்யமும் பொருந்: திய பான்மையைப் பார்த்து அந்த ஏகாம்பரேசுவரரை வாழ்த்தி வணங்கும் பொருட்டு எடுத்துக் கொண்ட வடிவங் கள் பலவற்றை மேற்கொண்டு சங்க நிதி, பதும நிதி என்று. இரண்டு நிதிகளுக்கும் அரசனாகிய குபேரன் தங்கு' பொருட்டு, அவன் வாழும் அளகாபுரியை வகுத்து அமைத்த இயல்பை அவை தோற்றச் செய்யும். பாடல் வருமாறு: ' வெயிலுமிழும் பன்மணிப்பூண் வணிக மாக்கள்

விரவுநிதி வளம்பெருக்கும் வெறுக்கை மிக்க வயின்நிலவு மணிக்கடைமா நகர்கள் எல்லாம்

வனப்புடைய பொருட்குலங்கள் மலித லாலே கயிலைமலை யார்கச்சி ஆலயங்கள் பலவும்

கம்பமுமே வியதன்மை கண்டு போற்றப் பயிலுமுருப் பலகொண்டு நிதிக்கோன் தங்கப்

பயில்அளகா புரிவகுத்த பரிசு காட்டும்.' வெயில்-ஒளியை. உமிழும்.வெளி விடும்; வீசும். பல்பல வகையான மணி-மாணிக்கங்களைப் பதித்திருக்கும். ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: மாணிக்கம், முத்து. பவளம், பதுமராகம், புட்பராகம், வைரம், கோமேதகம், மரகதம், வைடுரியம் என்பவை. ப்: சந்தி. பூண்-அணிகலன் களை அணிந்து கொண்டிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். வணிகமாக்கள்-வைசியர்களாகிய மனிதர்கள். வணிக: ஒரு மை பன்மை மயக்கம். விரவு-தங்களிடம் மேவிய. நிதி-செல்வத் தின் வளம்-வளத்தை, ப்ெருக்கும்-மேன் மேலும் பெருகு, மாறு செய்யும், வெறுக்கை-நிதிகள்:ஒருமை பன்மை மயக்கம். மிக்க-மிகுதியாக உள்ள. வயின்-இடங்களில்; ஒருமை பன்மை மயக்கம். நிலவு-அமைந்திருக்கும். மணி-அழகிய. க்:சந்தி. கடை-கடைகளைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். மா-பெரிய. தகர்கள்-நகரங்கள். எல்லாம்-எல்லா வற்றிலும். வனப்புடைய-அழகைப் பெற்ற பொருட் குலங்: கள்-பண்டங்களின் வகைகள். பொருள்: ஒருமை பன்மை,