பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

পতঞ্জত றிப்புத் தொண்ட நாயனார் புராணம் 421.

வேத வேதியர் வேள்வியே தியன: மாதர் ஓதி மலரே பிணியன; காதல் வீதிவிலக்கே கவலைய, குதம் மாதவி யேபுறம் சூழ்வன." வேத - இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறை யாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய ஒருமை பன்,ை மயக்கம். வேதியர்-மறையவர்கள் புரியும், ஒருமை பன்மை மயக்கம். வேள்வியே-யாகங்களே, ஒருமை பன்மை மயக்கம். தியன.நெருப்பை உடையவை. காஞ்சீபுரத்தில் வாழும் மக்கள் கெட்டவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது குறிப்பு. மாதர்-விருப்பம் மருவிய பெண்மணிகளினுடைய ஒருமை பன்மை மயக்கம். ஒதி-கூந்தல்களில் குடியுள்ள ஒருமை பன்மை மயக்கம். மலரே-மலர்களே, ஒருமை பன்மை மயக்கம். பிணியன-கட்டுவதை உடையவை. காஞ்சீ புரத்தில் வாழும் மக்கள் ஒரு நோயும் இல்லாமல் தேக ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வருவார்கள் என்பது குறிப்பு. காதல்-விருப்பத்தை உண்டாக்கும். வீதி விலக்கேகுறுந் தெருக்களே ஒருமை பன்மை மயக்கம். கவலையகவர்த்த வழிகளை உடையவை. கவலை: ஒருமை பன்மை மயக்கம். அந்தக் காஞ்சீபுரத்தில் வாழும் மக்கள் மனக் கவலை சிறிதும் இல்லாமல் வாழ்ந்து வருவார்கள் என்பது குறிப்பு. சூதம்-மா மரங்களும்; ஒருமை பன்மை மயக்கம். மாதவியே-குருக்கத்தி மரங்களுமே, ஒருமை பன்மை மயக்கம். புறம்-காஞ்சீபுரத்தினுடைய வெளியிடங்களில்; ஒருமை பன்மை மயக்கம். சூழ்வன-சுற்றி வளர்ந்து நிற்கும். காஞ்சீபுரத்தில் உள்ள பக்தர்கள் யாரையும் புறங்கூறாமல் வாழ்ந்து வருவார்கள் என்பது குறிப்பு. -

பிறகு உள்ள 107-ஆம் பாடலின் கருத்து வருமாறு: மயில்களைப் போன்ற சாயல்களைப் பெற்றவர்களாகிய பெ-27