பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 423

வாழும் அன்பர்கள் திகைப்பை அடையாமல் பொறுமை யாகத் தங்களுடைய கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு வாழ்வார்கள் என்பது குறிப்பு. பாய-பரவி வளர்ந்திருக்கும். சோலை-பலவகை மரங்கள் ஓங்கி வளரும் பூம்பொழில்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தருவே-மரங்களே, ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: மாமரம்,பலா மரம், தென்ன மரம், பலவகை வாழை மரங்கள், நாரத்தை மரம், விளா மரம், களாச் செடி, முந்திரி மரம் முதலியவை. பயத்தன-பழங்களை உடையவை. பயம்: ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: மாம் பழம், தெங்கம் பழம், பலாப் பழம், விளாம் பழம், கொய்யாப் பழம், மாதுளங் கனி, வேப்பம் பழம் முதலியவை. காஞ்சீபுரத்தில் வாழும் பக்தர் கள் காலனுக்கும் கூட அஞ்சாமல் தைரியமாக இருப்பார்கள் என்பது குறிப்பு.

அடுத்து வரும் 108-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: பெருமையைப் பெற்றவராகிய ஏகாம்பரேசுவரருடைய பக்தர்களுடைய பக்தியே முன்னால் நிறைந்திருப்பவை: குளிர்ச்சியையும் நறுமணத்தையும் செழுமையையும் கொண்ட மகரந்தப் பொடிகளே பொடிகளாக இருப்பவை; சிவப்பு நிறத்தைப் பெற்ற நீளமான மாணிக்கங்களைக் கட்டி யிருக்கும் மாலைகளே ஆடவர்களின் மார்புகளிலும் பெண் மணிகளின் மார்புகளிலும் தொங்கிக் கொண்டிருக்கும். அளவு இல்லாத குங்குமப் பூக்களைக் கரைத்திருக்கும் குழம்பே வழுக்கி விழச் செய்பவை. பாடல் வருமாறு:

அண்ண லார் அன்பர் அன்பேமுன் ஆர்த்தன;

தண்ண றும்செழும் தாதே துகள்வன: வண்ண நீள்மணி மாலையே தாழ்வன; எண்ணில் குங்குமச் சேறே இழுக்கின.” - அண்ணலார்-பெருமையைப் பெற்றவராகிய ஏகாம்பரே சுவரருடைய. அண்ணலார்-தலைவர் எனலும் ஆம். அன்பர்பக்தர்களுடைய, ஒருமை பன்மை மயக்கம். அன்பே-பக்தியே.