பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 பெரிய புராண விளக்கம்-5

முன்-அந்த ஏகாம்பரேசுவரருடைய சந்நிதிக்கு முன்னால், ஆர்த்தன-நிறைந்திருப்பவை. தோத்திரங்களைக் கூறி ஆர வாரம் செய்வார்கள்’ எனலும் ஆம். காஞ்சீபுரத்தில் வாழும் திருத்தொண்டர்கள் யாருக்கும் கட்டுப்பட்டு அடிமைகளாக வாழ மாட்டார்கள் என்பது குறிப்பு. தண்-குளிர்ச்சியையும். நறும்-நறுமணத்தையும். செழும்-செழுமையையும் கொண்ட. தாதே-மலர்களில் உள்ள மகரந்தப் பொடிகளே; ஒருமை பன்மை மயக்கம். துகள்வண்-பொடிகளாக இருப்பவை. காஞ்சீபுரத்தில் வாழும் பக்தர்கள் சிறிதளவும் அழுக்கை உடையவர்களாக இராமல் தூயவர்களாக விளங்குவார்கள் என்பது குறிப்பு. வண்ண-சிவப்பு நிறத்தைப் பெற்று. நீள்நீளமாக உள்ள. மணி-மாணிக்கங்களைக் கட்டியிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். மாலையே-மாலைகளே; ஒருமை பன்மை மயக்கம். தாழ்வன-ஆடவர்களின் மார்புகளி லும் பெண்மணிகளின் மார்புகளிலும் தொங்கிக் கொண்டிருக் கும். அந்தக் காஞ்சி மாநகரத்தில் வாழும் திருத்தொண்டர் கள் எந்தக் காலத்திலும் தாழ்வை அடைய மாட்டார்கள் என்பது குறிப்பு. எண்-அளவு. இல்-இல்லாத கடைக்குறை. குங்கும-குங்குமப் பூக்களைத் கரைத் திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ச்சந்தி. சேறே-குழம்பே. இழுக்கின-வீதி யில் நடக்கும் மக்களை வழுக்கி விழுமாறு செய்பவை. அந்தக் காஞ்சீபுரத்தில் வாழும் பக்தர்கள் எந்த வகையான இழுக் கையும் அடைய மாட்டார்கள்; பழிச் சொற்களைப் பிறர் கூறுமாறு வாழ மாட்டார்கள் என்பது குறிப்பு.

அடுத்து உள்ள 109-ஆம் பாடலின் கருத்து வருமாறு: வெற்றியைப் பெற்ற தேவலோகத்தில் வாழும் தேவர் கள் திருவிளையாடல்களும் காஞ்சீபுரத்தில் என்றைக்கும் வாழும் மக்கள் வாழும் இயல்பும் நன்றாகவும் தங்களுடைய திருவுள்ளங்களில் அந்தத் தலத்தில் வாழும் மக்கள் கொண்ட விருப்பங்கள் ஒன்றையும் அந்தக் காஞ்சீபுரத்தில் நீங்காத விதத்தில் பெறச் செய்து செலுத்துவதாக அந்த நகரம்