பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 425

விளங்கும். பாடல் வருமாறு: !

வென்றி வானவர் தாம்விளையாடலும் என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும் நன்றும் உள்ளத்து கண்ணினர் வேட்கைகள் ஒன்றும் அங்கொழி யாவகை உய்ப்பது.' வென்றி-அசுரர்களை வென்ற வெற்றியைப் பெற்ற. வானவர்.தேவலோகத்தில் வாழும் தேவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். தாம்:அசை நிலை. விளையாடலும்-புரியும் திருவிளையாடல்களும்; ஒருமை பன்மை மயக்கம். என்றும். அந்தக் காஞ்சீபுரத்தில் என்றைக்கும். உள்ளவர்-வாழும் மக்கள்; ஒருமை பன்மை மயக்கம். வாழும்-தங்கள் வாழ்க் கையை நடத்தும். இயற்கையும்-இயல்பும். நன்றும்-நன்றாக வும். உள்ளத்து தங்களுடைய திருவுள்ளங்களில்; ஒருமை பன்மை மயக்கம். நண்ணினர்-அந்தத் தலத்தில் வாழும் மக்கள்; ஒருமை பன்மை மயக்கம். வேட்கைகள்.கொண்ட விருப்பங்கள். அவையாவன: செல்வத்தைப் பெறுதல், நன்மக்களை ஈனுதல், நல்ல கணவரைப் பெறுதல், கற்பு டைய மனைவியை அடைதல், இடித்துரைக்கும் நண்பர் களைப் பெறுதல், சமயத்தில் உதவி புரியும் உறவினர்களை உடையவர்களாக இருத்தல், நல்ல தோழிமார்களைப் பெறு தல் முதலியவை. ஒன்றும்-ஒன்றையும். அங்கு-அந்தக் காஞ்சீபுரத்தில். ஒழியா.நீங்காத வகை-விதத்தில், உய்ப்பது -பெறச் செய்து செலுத்துவதாக அந்த நகரம் விளங்கும்.

பிறகு உள்ள 110-ஆம் பாடலின் கருத்து வருமாறு: - " தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணன் என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய பறக்கும் கோட்டைகளாகிய திரிபுரங்களை எரித்து வென்றவராகிய ஏகாம்பரேசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். காஞ்சீ புரத்தினுடைய புகழ் பரவியிருக்கும் நீண்ட பதினான்கு புவனங்களிலும் எல்லை இல்லாத போகங்களை வழங்கும் அழகைப் பெற்ற வள்ங்கள் யாவும் நிறைந்திருக்கும்