பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 பெரிய புராண விளக்கம்-5

கொள்ளும் பாத்திரம் என்று பாராட்டுமாறு அந்தக் காஞ்சீ புரத்தில் நிரம்பியிருக்கிறது. பாடல் வருமாறு:

புரங்க டந்தவர் காஞ்சி புரம்புகழ்

பரம்பு நீள்டிவ னம்பதி னான்கினும் வரம்பில் போக வனப்பின் வளமெலாம் கிரம்பு கொள்கலம் என்ன நிறைந்ததால்.” புரம்-தாரகாட்சன், வி த் யு ன் மா வி , வ | ண ன் என்னும் மூன்று அசுரர்களுக்கு உரிய பறக்கும் கோட்டை களாகிய திரிபுரங்களை, ஒருமை பன்மை மயக்கம். திரி. மூன்று. கடந்தவர்-எரித்து வென்றவராகிய ஏகாம்பரேசுவரர். காஞ்சிபுரம்-திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் காஞ்சீபுரத்தினுடைய. புகழ் பரம்பு-புகழ் பரவியிருக்கும். நீள்-நீளமாகிய, புவனம்-உலகங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பதினான்கினும்-பதினான்கிலும், வரம்பு-எல்லை. இல்-இல்லாத கடைக்குறை. போக-போகங்களை வழங்கும்; ஒருமை பன்மை மயக்கம். வனப்பின்-அழகைப்பெற்ற. வளம்-வளங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எலாம். யாவும்; இடைக்குறை. நிரம்பு-நிறைந்திருக்கும். கொள் கலம்பொருள்களைக் கொள்ளும் பாத்திரம். என்ன-என்று பாராட்டுமாறு. நிறைந்தது-அந்தக் கா ஞ் சீ புரத் தி ல் வளங்கள் நிரம்பியிருக்கின்றன. ஆல்: ஈற்றசை நிலை. பிறகு வரும் 111-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்த விதங்களைப் பெற்ற அழகிய காஞ்சி மாநகர மாகிய அதில் ஒரு பக்கத்தில் தங்கி வாழும் மக்கள் இந்தப் பூ மண்டலத்தில் அடைந்த மானிடப் பிறவிகளால் வண்ணாரச் சாதியில் பிறந்தவர் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் என்னும் திருநாமத்தைப் பெற்றவர்; நேர்மை யாகிய பக்தியைப் பெற்ற திருவுள்ளத்தை உடையவர். அந்த நாயனார்; நற்குண நல்லொழுக்கத்தின் வழியில் நிலை நின்றவர் அவர் மையைப் போல நீல நிறம் தங்கியிருக்கும் கிழித்தைப் பெற்றவராகிய ஏகாம்பரேசுவரருடைய திருவடி