பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1430 > பெரிய புராண விளக்கம்-8

ஊர்ஒலிக்கும் பெருவண்ணார்

எனவொண்ணா உண்மையினார் நீரொலிக்க அராஇரைக்க

நிலாமுகிழ்க்கும் திருமுடியார் பேரொலிக்க உருகுமவர்க் • ,

கொலிப்பர்பெரு விருப்பினொடும்.’’ தேர்-இரதம் ஒடும்போது. ஒலிக்க-ஒலியை எழுப்ப. மா-குதிரைகள்; ஒருமை பன்மை மயக்கம். ஒலிக்ககனைக்க. த்:சந்தி. திசை-கிழக்கு, மேற்கு, வடக்கு: தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென் மேற்கு என்னும் எட்டுத் திசைகளிலும்; ஒருமை பன்மை மயக்கம். ஒலிக்கும்-சென்று ஒலியை எழுப்பும். புகழ்-புகழைப் பெற்ற. க்:சந்தி. காஞ்சி ஊர்-காஞ்சீபுரம் என்னும் சிவத் தலத்தில். ஒலிக்கும்-பல மக்களுடைய ஆடைகளை வெளுத்து வழங்கும். பெரு-பெருமையைப் பெற்ற வண்ணார் எனவண்ணார் என்று கூற. என: இடைக்குறை. ஒண்ணா-முடி யாத, உண்மையினார்-மெய்ம்மையைப் பெற்றவர் அந்தத் திருக்குறிப்புத் தொண்ட நாயனார். நீர்-கங்கையாற்றில் உள்ள புனல். ஒலிக்க-ஒலியை எழுப்ப. அரா-பாம்புகள்: ஒருமை பன்மை மயக்கம். இரைக்க-முழங்க. நிலா-பிறைச் சந்திரன். முகிழ்க்கும்-அரும்பும். திரு.அழகிய முடியார்சட்ாபாரத்தைக் கொண்ட தலையைப் பெற்றவராகிய ஏகாம்பரேசுவர்ருடைய. பேர்-திருநாமத்தை. ஒலிக்க-யார' வது கூற. உருகும்-அதைக் கேட்டு உருக்கத்தை அடையும். அவர்க்கு-அந்தப் பக்தர்களுக்கு, ஒருமை பன்மை மயக்கம். பெரு-பெரிய. விருப்பினொடும்-விருப்பத்தோடும். ஒலிப்பர்வெளுத்து அந்த ஆடைகளை வழங்குவார் அந்த நாயனார். பிறகு வரும் 114-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: தேஜஸ்ஸைப் பெற்ற செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளைப் பெற்றவராகிய ஏகாம்பரேசுவரரு டைய அடியவர்களுடைய ஆடைகள் பெற்ற புழுதியாகிய