பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 437

புரிந் த. தவத்தீர்-தவத்தைப் பெற்ற தவசியாரே. திருமேனிதேவரீருடைய அழகிய திருமேனி. இளைத்திருந்தது-இளைத் திருந்ததற்கு. என்.என்ன காரணம்? கடைக்குறை. என்றுஎன்று கேட்டு விட்டு, கை-அவரைத் தம்முடைய கைகளைத் தம்முடைய தவையின் மேல் வைத்து: ஒருமை பன்மை மயக்கம். தொழுது-கும்பிட்டுப் பிறகு அந்தத் தவசியா ருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி. கந்தையினை-பிறகு சயாம் உம்மிடம் கொடுத்துவைத்த கந்தல் துணியை. த்:சந்தி கழுவ-தோய்ப்பதற்காக. தந்தருளும்-வழங்கியருளுவிராகப் என-என்று; இடைக்குறை. மை-மையைப் போல. திகழ்நீலமாக விளங்கும். கண்டம்-தம்முடைய திருக்கழுத்தை' கரந்த-மறைத்து விட்டு எழுந்த ருளிய, மா-பெருமையைப் பெற்ற, தவத்தோர்-தவத்தைப் புரிந்தவராகிய அந்தத் தவசியார். அருள் செய்வார்-பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்வாரானார்.

பிறகு உள்ள 119-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

எம்முடைய இந்தக் கந்தல்: துணி அழுக்கு ஏறி கைக. ளால் எடுக்க முடியாதது என்றாலும் நான் என்னுடைய உடம்பில் கொண்டிருந்த குளிருக்கு வருத்தத்தை அடைந்து இதை யான் விடமாட்டேன்; மேலைச் சமுத்திரத்தில் அந்த அத்தமன மலையில் வெம்மையான கிரணங்களை வீசும் - சூரியன் விழுந்து அத்தமனத்தை அடைவதற்கு முன்னால் என்னுடைய கந்தல் துணியை நீர் வழுங்குவீரானால் அதை என்னுடைய கைகளிலிருந்து,வாங்கிக் கொண்டு சென்று நீர் வெளுத்துக் கொண்டு வேகமாக வருவீராக!' என்று அந்தத் தவசியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு: . . . . . . . " . - இக்கந்தை அழுக்கேறி . . . .

- எடுக்கவொனா தெனினும்யான்

மெய்க்கொண்ட குளிர்க்குடைந்து - விடமாட்டேன். மேல்கடற்பால்

பெ-28 * . . . . ~ *. . . ...- - -