பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 - பெரிய புராண விளக்கம்-5

டைய கந்தல் துணியை வெளுத்து விட்டு அவரிடம் வழங்கு வதற்காக அதை எடுத்துக் கொண்டு அந்தத் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சென்று நறுமணம் கமழும் தடாகத்தில் திரம்பியிருக்கும் புனல் ஒடும் துறையில் அந்தக் கந்தல் துணி யில் ஏறியிருந்த அழுக்கை ஒரு கல்லில் தோய்த்துப் போக்கி விட்டு மிகுதியாக அந்தத் துணியை ஒரு பானையில் வேக வைத்து எடுத்து அதை வெயிலில் உலரச் செய்து மீண்டும் அந்தத் துணியை வெளுக்கப் போகும் சமயத்தில் பெரிதா கும் பகல் நேரம் சென்று பிற்பகல் நேரமாகி மான் குட்டி யைத் தம்முடைய திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் ஏகாம்பரேசு வரர் வழங்கிய திருவருளினால் மாரி ஆகாயத்தில் எழுந்து வந்து சொரியும். பாடல் வருமாறு:

' குறித்தபொழு தேஒலித்துக்

கொடுப்பதற்குக் கொடுபோந்து வெறித்தடநீர்த் துறையின்கண் மாசெறிந்து மிகப்புழுக்கிப் பிறித்தொலிக்கப் புகும்.அளவில்

பெரும்பகல்போய்ப் பின்பகலாய் மறிக்கரத்தார் திருவருளால்

மழைஎழுந்து பொழிந்திடுமால்.' குறித்த-அந்தத் தவசியார் குறிப்பிட்ட பொழுதேநேரத்திலேயே. ஒலித்து-அந்தத் தவசியாருடைய கந்தல் துணியை வெளுத்து விட்டு. க்சந்தி. கொடுப்பதற்கு-அந்தத் தவசியாரிடம் வழங்குவதற்காக. க்:சந்தி, கொடு-அந்தத் துணியை எடுத்துக்கொண்டு. போந்து-அந்தத் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சென்று. வெறி நறுமணம் கமழும். த்:சந்தி. தட-ஒரு தடாகத்தில் நிரம்பியிருக்கும். நீர்த் துறை வின் கண்-புனல் ஒடும் துறையில். மாசு-அந்தக் கந்தல் துணியில் ஏறியிருந்த அழுக்கை. எறிந்து-ஒரு கருங்சல்லில் தோய்த்து விட்டு. மிக-மிகுதியாக, ப்:சந்தி. புழுக்கி-ஒரு பானையில் அந்தத் துணியை வேக வைத்து. ப்:சந்தி. பிறித்து