பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.444 பெரிய புராண விளக்கம்-5

தோண்டராகிய அந்தத் திருக்குறிப்புத் தொண்ட நாயனார். தனி-தனியாக, நின்றார்-நின்று கொண்டிருந்தார். விடமழை விட. க்:சந்தி. காணார்.அவர் பார்க்கவில்லை. மேவார்.பகைவர்களை ஒருமை பன்மை மயக்கம், போல். போல. கங்குல்-இரவு நேரம். வர-அப்போது வந்து சேர. மெய்-தம்முடைய திருமேனி குளிரும்-குளிரை அடையும். விழு-மேலான, த்:சந்தி. தவர்.பால்-தவத்தைப் புரிந்த தவசி யினிடத்தில். ஆஆ.ஐயோ! ஐயோ! என்-அடியேனுடைய. குற்றேவல்.சிறிய செயல். அழிந்தவா-அழிந்து போனவாறு: என்னே! என-என்று எண்ணி; இடைக்குறை. விழுந்தார் -அந்த நாயனார் தரையின் மேல் வீழ்ந்தார். -

பிரம கபாலத்தை ஏந்தியவர்: "சுருதியான் தலையும்.' என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், சிரமேற்ற நான்முகன்றன் தலையும்.’’ என்று திருநாவுக்கரசு நாய னாரும், நல்ல மலரின் மேல் ந ான்முகனார் தலை, ஒல்லை அரிந்ததென்றுந்தீ பற. என்று மாணிக்க வாசகரும்,. "பண்பாய நான் மறையான் சென்னிப் பலி தேர்ந்தான்.” என்று கபிலதேவ நாயனாரும் பாடியவற்றைக் காண்க.

அடுத்து வரும் 124-ஆம் பாடலின் கருத்து வருமாறு: '

'வானத்திலிருந்து பொழிந்து தரையில் விழுந்த மாரி விடாமல் உண்மையான தவத்தைப் புரிந்த அந்தத் தவசியார் திருவாய் மலாந்தருளிய நேரத்தின் எல்லை கடந்து விட்டது; முன்பு அந்தத் தவசியாருடைய ஆடையை வெளுத்துக் கிகாண்டு வந்து அடியேனுடைய இல்லத்தில் வீசும் காற்றில் உலர்த்துவதை அடியேன் தெரிந்து கொள்ளவில்லை; செழு. மையாகிய தவத்தைப் புரிந்த அந்தத் தவசியாருடைய திரு. மேனி குளிரை அடைவதைப் பார்க்கும் தீய செயலைப் புரிந்த தொண்டனாகிய அடியேனுக்கு இனிமேல் இதுதான் சேய்யக் கூடிய செயல்” என்று எண்ணி அந்தத் திருக்குறிப், புத் தொண்ட நாயனார் துணிவை அடைந்து எழுந்து செல்: வாரானார். பாடல் வருமாறு: . . . . . .