பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 445,

'விழுந்தமழை ஒழியாது - - மெய்த்தவர்சொல் லிய எல்லை

கழிந்தது;முன் பொலித்துமனைக்

காற்றேற்க அறிந்திலேன்; செழுந்தவர்தம் திருமேனி

குளிர்காணும் தீங்கிழைத்த தொழும்பனேற் கினியிதுவே - செயல்' என்று துணிந்தெழுந்தார்.' விழுந்த-வானத்திலிருந்து பொழிந்து தரையில் விழுந்த. மழை-மாரி. ஒழியாது-விடாமல். மெய்-உண்மையாகிய, த்:சந்தி. தவர்-தவத்தைப் புரிந்த அந்தத் தவசியார். சொல்லிய-தி ரு வாய் மலர் ந் த ரு ளி ச் செய்த, எல்லை. நேரத்தின் எல்லை. கழிந்தது.கடந்து விட்டது. முன்புமுன்னால். ஒலித்து-அந்தத் தவசியாருடைய ஆடையை அடி. யேன் வெ ளு த் துக் கொண்டு வ ந் து . மனை. அடி யேனுடைய இல் லத் தி ல் , க்:சந்தி. காற்று-வீசும் காற்றில், ஏற்க-தக்கபடி உலர்த்துவதை அறிந்திலேன்-அடி யேன் தெரிந்து கொள்ளவில்லை. செழும்-செழுமையாகிய. தவர்தம்-தவத்தைப் புரிந்த அந்தத் தவசியாருடைய். தம்: அசைநிலை. திருமேனி-அழகிய திருமேனி, குளிர்-குளிரை அடைவதை; ஆகு பெயர்: காணும்-பார்க்கும். தீங்கு-தீய செயலை. இழைத்த-புரிந்த தொழும்பனேற்கு-தொண்ட னோகிய அடியேனுக்கு. இனி-இனிமேல். இதுவ்ே-இதுதான். செயல்-செய்யக் கூடிய காரியம். என்று. என எண்ணி. துணிந்து-அந்தத் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் துணிவை அடைந்து. எழுந்தார்-தம்முடைய திருமாளிகை. யிலிருந்து எழுந்து செல்வாரானார். . . . . . . . பிறகு வரும்.125-ஆம் கவியின் கருத்து வருமாறு: "அந்தத் தவசியார் தம்மிடம் கொடுத்திருந்த கந்தல் துணியைத் தோய்ப்பதற்காக அடிக்கும் கருங்கற் பாறையின் மேல் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் 'அடியேனுடைய