பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 44;

களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். தி:சந்தி. தழும்பர்தழும்புகளைப் பெற்றவராகிய ஏகாம்பரேசுவரருடைய. தழும்பு: ஒருமை பன்மை மயக்கம். மலர்-செந்தாமரை மலரைப் போல. ச்: சந்தி. செங்கை-சிவந்த திருக்கரம். பிடித்தது-அந்தத் திருக்குறிப்புத் தொண்ட நாயனாருடைய திருக்கரங்களைப் பிடித்துக் கொண்டது. ... . . . அடுத்து உள்ள 126-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "வானத்தில் நிறைந்திருந்த மழை பொழிந்த நீர் நின்று விேட அந்த மழை மலர்களைப் பொழிந்த மாரியாக மாறி விடப் பக்கத்தில் தேன் நிரம்பியுள்ள கொன்றை மலர் மாலையை அணிந்தருளிய அழகிய முடியைப் பெற்றவராகிய ஏகாம்பரேசுவரர் போர் புரியும் இடப வாகனத்தின்மீது அழகு நிரம்பிய தம்முடைய மனைவியாகிய காமாட்சியம்மை யோடும் வெளிப்பட்டு நின்று காட்சியை வழங்கியருளினார்; உண்மையான திருத் தொண்டராகிய அந்தத் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் நிரம்பிய பக்தியினால் உருக்கத்தை அடையத் தம்முடைய கைகளைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கும்பிட்டு விட்டுப் பிறகு தரையில் விழுந்து அந்த ஏகாம்பரேசுவரரை வணங்கி விட்டுத் தனியாக நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு: -

' வான்நிறைந்த புனல்மழையோய்

மலர்மழையா விடமருங்கு தேன்நிறைந்த மலரிதழித்

திருமுடியார் பொருவிடையின் மேல்நிறைந்த துணைவியொடும்

வெளிகின்றார்; மெய்த்தொண்டர் தான்நிறைந்த அன்புருகக்

கைதொழுது தனிகின்றார்.' مة . . . . வான்-வானத்தில், நிறைந்த-நிரம்பியிருந்த, புனல் மழை-மழை பொழிந்த நீர். போய்-நின்றுவிட, மலர். தேவர்கள் கற்க மதத்திலிருந்து கொய்து கொண்டு வந்தி