பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 - பெரிய புராண விளக்கம்

ருந்த மலர்களை; ஒருமை பன்மை மயக்கம். மழையாடிடபொழிந்த மாரியாக மாறி விட. மருங்கு-பக்கத்தில். தேன் நிறைந்த-தேன் நிரம்பியுள்ள மலர் இதழி-கொன்றை. மலர் மாலையை; ஆகு பெயர். த்:சந்தி. திரு-அணிந்தருளிய அழகிய முடியார்-முடியைப் பெற்றவராகிய ஏகாம்பரேசு வரர். பொரு-போர் புரியும். விடையின் மேல்-இடப. வாகனத்தின்மீது. நிறைந்த-அழகு நிரம்பியுள்ள, துணைவி யோடும்-தம்முடைய பத்தினியாகிய காமாட்சி அம்மையோ டும். வெளி.வெளிப்பட்டு. நின்றார்-நின்று தம்முடைய காட்சியை வழங்கியருளினார். மெய்-உண்மையான. த்: சந்தி, தொண்டர்-திருத்தொண்டராகிய திருக்குறிப்புத் தொண்ட நாயனார். தான்: அசை நிலை. நிறைந்த-தம்முடைய திரு. வுள்ளத்தில் நிரம்பிய, அன்பு-பக்தியினால், உருக-உருக் கத்தை அடைய. க்:சந்தி. கை தம்முடைய கைகளை: ஒருமை பன்மை மயக்கம், தொழுது-தம்முடைய தலையின் மேல் வைத்துக் கும்பிட்டு விட்டுப் பிறகு தரையில் விழுந்து அந்த ஏகாம்பரேசுவரரை வணங்கி விட்டு. தனி-தனியாக. நின்றார்-நின்று கொண்டிருந்தார். -

தேன் நிறைந்த மலர் இதழி: 'தேனகத்தார் வண்டது.

வுண்டதிகழ் கொன்றை.', 'தேனமர் கொன்றையன்.", * கள்ளார்ந்த பூங்கொன்றை.', தேனமர் கொன்றை. யினானை.’’, தேனிடம் கொளும் கொன்றையத்

தாரினார்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாய னாரும, தேன். சொட்டச் சொட்ட நின்றட்டும் திருக் கொன்றை..", ‘'தேனப்பூ வண்டுண்ட கொன்றை. யான். , தேனேறும் மலர்க்கொன்றைக் கண்ணியான்." . 'தேனேறு திரு இதழித்தாரார்., 'மட்டிலங்கு கொன்றை யந்தார் மாலை சூடி., 'தேனாரும் கொன்றையனே." என்று திருநாவுக்கரசு நாயனாரும், மட்டார் மலர்க் கொன்றையும்.', 'மது மலர்க் கொன்றையான்.', 'மது அார் கொன்றைப் புதுவீ.', 'தேனை ஆடிய கொன்ற்ை.