பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 45毽

"சீர்த்தி நிலை பெற்று நிற்கும் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் ஆற்றிய அழகிய பணியாகிய் திருத்தொண்டினை வாழ்த்தி அவரை வணங்கி விட்டு இந்தப் பூமண்டலத்தில் அன்மயும்ாறு தம்முடைய தந்தையினுடைய காலை அற்று. விழுமாறு மழுவாயுதத்தினால் வெட்டின்வராகிய சண்டேசு வர நாயண்ாருடைய இயல்பை இனிமேல் அடியேன் பாடு: வேன்: திருவெண்ணெய்நல்லூரில் கோயில் கொண்டிருக்கும் ருெபாபுரீசுவரர் வழங்கிய பெரிய திருவருளால் உண்மை யான திருத்தொண்டராகிய சுந்தர மூர்த்தி நாயனார் அந்த ஈசுவரரை, "பித்தன்' என்று வைத்துப் பிதற்றிப்பாடியரு. ளியதனால் இந்த உலகத்தில் வாழும் யார் இதனுடைய உண்மையைத் தெரிந்து கொண்டு கூறுவதற்கு உடம்பட்டு: எழுவார்? பாடல் வருமாறு: .

1 சீர்நிலவு திருக்குறிப்புத்

தொண்டர்திருத் தொழில்போற்றிப் பார்குலவத் தந்தைதாள்

அறஎறிந்தார் பரிசுரைக்கேன்; பேரருளின் மெய்த்தொண்டர்

"பித்தன்' எனப் பிதற்றுதலால் ஆருலகில் இதனுண்மை

அறிந்துரைக்க இசைக்தெழுவார்.' இந்தப் பாடல் சேக்கிழார் அடுத்து வரும் சண்டேசுர நாயனார் புராணத்திற்குத் தோற்றுவாயாகவும், சுந்தர மூர்த்தி நாயனாருடைய துதியாகவும் அமைந்துள்ளது. Ձri-- சீர்த்தி. நிலவு-நிலைபெற்று நிற்கும். திருக்குறிப்புத் தொண் டர்-திருக்குறிப்புத் தொண்ட நாயனார். திரு.அழகிய த்:சந்தி. தொழில்-ஆற்றிய பணியாகிய திருத் தொண்டினை. போற்றி-வாழ்த்தி அந்த நாயனாரை வணங்கி விட்டு. ப்:சந்தி. பார்-இந்தப் பூ மண்டலத்தில். குலவ-அமையுமாறு: த்:சந்தி. தந்தை-தம்முடைய தந்தையாகிய எச்சதத் தனுடைய. தாள்-காலை. அற-அற்று விழுமாறு. எறிந்தார்