பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 46%.

குறை. வானவர்.தேவர்களினுடைய, ஒருமை பன்மை மயக் கம். கோன்-மன்னனாகிய இந்திரனுடைய. நாகம்-வாகனமா கிய வெள்ளை யானையும். அணையும்-வந்து அடையும். கந்து-கட்டுத் தறிகள்: ஒருமை பன்மை மயக்கம். எனவும்-என்று இயம்புமாறும். என: இடைக்குறை. நாட்டும்-நட்டு வைத்திருக்கும். யூப-யாகத் தூண்களினு: டைய, ஒருமை பன்மை மயக்கம். ஈட்டம்-கூட்டம். உளஅந்தச் சேய்ஞலூரில் இருக்கின்றன; இடைக்குறை.

பிறகு வரும் 5-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'இனிமையான பால் தங்களுடைய மடிகளிலிருந்து ஒழுகும்வண்ணம் ஒவ்வொரு வேளையிலும் ஹோமங்களுக்குப் பால் முதலியவற்றை அளிக்கும் பசுமாடுகள் போகின்றவை யும், தாங்கள் கானம் செய்த சாம வேத மந்திரங்களை எண்ணிக் கணக்குப் பார்க்கும் அந்தணர்கள் சமிதைகளைக் கட்டி வைக்க அவற்றைப் பசுமாடுகள் சுமந்து கொண்டு. வருகின்றவையும், மலர்களும் பசுமையாகிய இலைகளும் உடைய செந்தாமரைக் கொடிகளும் வெண்டாமரைக் கொடிகளும், அல்லிக் கொடிகளும், ஆம்பற் கொடிகளும்

வேறு கொடிகளும் படர்ந்திருக்கும் நீர் நிரம்பிய தடாகங். களில் முழுகி விட்டு வேதியர்களும், அந்தணப் பெண்மணி களும், தங்கள் தங்கள் இரு மாளிகைகளுக்குள் நுழைபவை: பும், இவ்வாறு அமையும் தன்மையோடு திகழ்பவையாகிய அழகிய நீளமான வீதிகள் பலவும் அந்தச் சேய்ஞலூரில் இருக் கின்றன. பாடல் வருமாறு:

' தீம்பால் ஒழுகப் பொழுதுதொறும்

ஒம தேனுச் செல்வனவும் தாம்பா டியசாமம்கணிப்போர்

சமிதை இடக்கொண் டணைவனவும் பூம்பா சடைநீர்த் தடம்மூழ்கி

மறையோர் மகளிர் புகுவனவும்