பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசண்டேசுர நாயனார் புராணம் , - - ;463

அவர்களுடைய புதல்வர்களும் வாழும் பொலிவைப் பெற்ற சிவத்தலமாகி ப அதற்குப் பக்கத் தில் ஒடும் மண்ணி பாற்றில் வீசும் அலைகள் பாயும் வயல்களினுடைய வரம்புகள் உள்ள இடங்களுக்கு அருகில் இருக்கும் பள்ளமான இடங்களில் முத்துக்களைச் சங்குப் பூச்சிகள் உமிழும் அந்த மண்ணி யாற்றினுடைய கரைகளின் பக்கங்களில் கட்டி வைத்த விசாலமான வேள்விச் சாலைகள் சூ இந்திருக்கும் பண்டங் களை வைக்கும் இடங்கள் நெருங்கி உள்ளன; தாங்கள் ஆரம் பித்த மங்கலச் சடங்கு க்ளை நிறைவேற்றிவிட்டு யாகத் தலைவர்கள் ஏறும் பெருமையைப் பெற்ற இரதங்கள் தேவர்கள் ஏறிவரும் விமானங்களைப் போல அந்தச் சேய் ஞலூரில் இருக்கின்றன. பாடல் வருமாறு: - .

' வாழ்பொற் பதிமற் றதன்மருங்கு

மண்ணித் திரைகள் வயல்வரம்பின் தாழ்வில் தரளம் சொரிகுலைப்பால்

சமைத்த யாகத் தடஞ்சாலை சூழ்வைப் பிடங்கள் நெருங்கியுள:

தொடங்கு சடங்கு முடித்தேறும் வேள்வித் தலைவர் பெருந்தேர்கள்

விண்ணோர் ஏறும் விமானங்கள்.'" வாழ்-அந்தணர்களும், அவர்களுடைய பத்தினிமார் களும், அவர்களுடைய புதல்வர்களும் வாழும். பொன்-பொலி வைப் பெற்ற பதி-சிவத்தலமாகிய, மற்று: அசைநிலை. அதன் மருங்கு-அந்தச் சேய்ஞலூருக்குப் பக்கத்தில் ஒடும். மண்ணி-மண்ணியாற்றில் வீசும்.த்:சந்தி. திரைகள்-அலைகள். வயல்-பாயும் வயல்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். வரம்பின்-வரப்புக்கள் உள்ள இடங்களுக்கு அருகில் இருக்கு கும். வரம்பு. ஒருமை பன்மை மயக்கம். தாழ்வில்-பள்ள மான் இடங்களில்; ஒருமை பன்மை மயக்கம். தரளம்-முத் துக்களை, ஒருமை பன்மை மயக்கம். சொரி-சங்குப் பூச்சிகள் உமிழும். குலைப்பால்-அந்த மண்ணியாற்றினுடைய க்ரை