பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனாயநாயனார் புராணம் 43

பிணமிடு காட்டயலே தீச்சுற்ற வந்து நின்றாடல்.’’ என்று கபிலதேவ நாயனாரும் பாடியருளியவற்றைக் காண்க.

'பிறகு வரும் 10-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அந்த ஆனாய நாயனார் பசுமாடுகளின் வரிசையோடு கூட அகலமாக உள்ள முல்லை நிலமாகிய காட்டுக்கு அந்தப் பசு மாடுகளை அழைத்துக் கொண்டு போய் ஏறிக் காட்டில் வாழும் கெட்ட விலங்குகளால் உண்டாகும் நோய்களைப் போக்கி எந்த இடத்திலும் பரிசுத்தமும் நறுமணமும் மென் மையும் உள்ள புற்களை மேய்ந்து தாங்கள் விருப்பத்தைங் பெற்ற பரிசுத்தமான நீரைக் குடித்து குறைவு இல்லாத பசு மாடுகளின் குறைவு இல்லாதவையாகிய கூட்டம் பலவாக வளரும் வண்ணம் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறவர் அந்த

நாயனார். பாடல் வருமாறு:

" ஆனிரை கூட அகன்புற விற்கொடு சென்றேறிக்

கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிக்தெங்கும் துரநறு மென்புல் அருந்தி விரும்பிய தூநீர்உண் னேமில் ஆயம் உலப்பில பல்க அளித்துள்ளார்.’’ - ஆன் திர்ை-அந்த ஆனாய நாயனார் பசுமாடுகளின் வரிசை.ஆன்: ஒருமை பன்மை மயக்கம். கூட-தம்மோடு கூட வர. அகன்-அகலமான புறவில்-முல்லை நிலமாகிய காட் .டிற்கு உருபு மயக்கம். கொடு-அழைத்துக் கொண்டு.சென்றுபோய் ஏறி-மேடுகளில் ஏறி. க்: சந்தி. கான்-காட்டில். உறை-வாழும். தீய-கெட்ட, விலங்கு-மிருகங்களால்; ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: சிங்கம், புலி, வேங்கைப் புலி, ஒருாய், நரி முதலியவை. உறு-உண்டாகும். நோன் கள்-புண்களை. கடிந்து-மருந்துகளைக் கொண்டு போக்சி. எங்கும்-எவ்விடத்திலும். தூ-பரிசுத்தமும். நறு-நறுமணமும். மென்-மென்மையும் கொண்ட, புல்-புற்களை ஒருமை பன்மை மயக்கம். அருந்தி-அந்தப் பசு மாடுகள் மேய்ந்து. விரும்பிய-தாங்கள் விழைந்த, துர-தூய்மையான. நீர்-நீரை. உண்டு-குடித்து. ஊனம்-குறைவு. இல்-இல்லாத கடிைக்