பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 பெரிய புராண விளக்கம்-5

அரும்புகளோடு; ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம். சினை-அந்த முல்லைக் கொடி படரும் சினைகளைப் பெற்ற: ஒருமை பன்மை பயக்கம். க்:சந்தி. காஞ்சி-காஞ்சி மரம். திகழும்-அந்தச் சேய்ஞலூரில் விளங்கும்.

பிறகு உள்ள 8-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: சோழ மன்னனும் அபயனும் ஆகிய குலோத்துங்கச் சோழன், தில்லையாகிய சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் அழகிய விமானத்தின் பரப்பைத் தங்கத்தால் வேய்ந்து தங்கமய மாசச் செய்த சோழ மன்னருக்குள் போர் புரியும் ஆண் சிங்கத்தைப் போன்ற அந்த மன்னன் எந்தக் காலத் திலும் இந்தப் பூ மண்டலத்தில் வாழும் மக்களைப் பாதுகாக்கும் அரசர் பெருமகனும் ஆகிய அநபாயச் சோழ மன்னன் பிறந்திருக்கும் பழைய பரம்பரையில் பிறந்த மன் னர்களுக்குக் கிரீடங்களை சூட்டும் பான்மை நிலாவும் ஊர்க ளாகிய காவிரிப்பூம்பட்டினம், கருவூர், திருவாரூர், உறையூர், சேய்ஞலூர் என்னும் ஐந்தில் ஒன்றாகி நெடுங்காலமாக விளங் கும் தகுதியைப் பெற்றது அந்தச் சேய்ஞலூர். பாடல்

வருமாறு: - -

' சென்னி அபயன் குலோத்துங்கச்

சோழன் தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக் கியவளவர்

போரே றென்றும் புவிகாக்கும் மன்னர் பெருமான் அநபாயன்

வரும்தொல் மரபின் முடிசூட்டும் தன்மை நிலவு பதிஐந்தின்

ஒன்றாய் நீடும் தகைத்தவ்வூர். $ # சென்னி-சோழ மன்னனும், அபயன்-அபயகுலசேகரனும், குலோத்துங்கச் சோழன்-குலோத்துங்கச் சோழனும், தில்லை - தில்லையாகிய சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் விமானத்தின்; இட ஆகு பெயர். த்:சந்தி. திரு.அழகிய. எல்லை-பரப்பை. பொன்னின் மயம் ஆக்கியதங்கத்தால்