பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470 பெரிய புராண விளக்கம்-இ

விளங்கும் காசியப கோத்திரத்தில் தலைமைப் பதவி அமைந்த பரம்பரையில் அருமையான மாணிக்கத்தை வழங். கிய அந்தப் பிராணியே விடத்தையும் கொடுக்கும் பாம். பைப் போல புண்ணியம், பாவம் என்னும் இரண்டு தன்மை, களைப் பெற்ற வினைகளுக்கும் ஓர் உருவாகும் எச்சதத்தன். என்பவன் இருப்பவன் ஆனான். பாடல் வருமாறு: -

பெருமை பிறங்கும் அப்பதியின்

மறையோர் தம்முள் பெருமனைவாழ் தருமம் நிலவு காசிபகோத்.

திரத்துத் தலைமை சால்மரபில் அருமை மணியும் அளித்ததுவே

நஞ்சும் அளிக்கும் அரவுபோல் இருமை வினைக்கும் ஒருவடிவாம்

எச்ச தத்தன் உளனானான்." - பெருமை-ஒர் எல்லைக்குள் அடங்காத பெருமையால்" பிறங்கும்-திகழும். அப்பதியின்-அந்தச் சிவத்தலமாகிய சேய் ஞலூரில் வாழும். மறையோர் தம்முள்-வேதியர்களுக்குள்;. ஒருமை பன்மை மயக்கம். தம்: அசை நிலை. பெரு-பெரிய. மனை-திரு மாளிகையில் . வாழ்-வாழ்ந்து வரும். தருமம்அறங்கள்; ஒருமை பன்மை மயக்கம். நிலவு-நின்று விளங்கும். காசிபகோத்திரத்து-காசியப கோத்திரத்தில், த்:சந்தி. தலைமை-தலைமைப் பதவி. சால்-அமைந்த. மரபில்-பரம்ப ரையில். அருமை-அருமையான. மணியும்-மாணிக்கத்தையும். அளித்து-உமிழ்ந்து. அதுவே-அந்த - ஊரும் பிராணியே. நஞ்சும்-விடத்தையும். அளிக்கும்-கக்கும். அரவு போல்-நல்ல பாம்பைப் போல. இருமை வினைக்கும்-புண்ணியம், பாவம். என்னும் இரண்டு தன்மைகளைப் பெற்ற வினைகளுக்கும்." வினை: ஒருமை பன்மை மயக்கம். மை: ஒருமை பன்மை மயக்கம். ஒருவடிவாம்-ஒர் உருவம் ஆகும். எச்சதத்தன்எச்சதத்தன் என்பவன். உளன் ஆனான்-இருப்பவன் -- ஆனான். உளன்: இடைக்குறை.