பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/476

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 பெரிய புராண விளக்கம்-5

புரிந்தாள். பெறும்-அந்தப் புதல்வர்களை ஈனும், பேறுபாக்கியத்தினுடைய, எல்லை - வ ர ம் பா கி ய . ப்:சந்தி: பயன்-பிரயோசனத்தை. பெறுவாள்.அவள் பெற்று விளங் குவாள். பற்றை-பாச பந்தத்தை. எறியும்-போக்கிவிடும். பற்று-பற்றுக்கோடு. வர-வருவதற்கு. ச்:சந்தி. சார்பாய்சார்பாகிய. உள்ள-இருக்கின்றன. பவித்திரை ஆம்-அவள் புனிதமானவள் ஆகும். -

அடுத்து உள்ள 12-ஆம் கவியின் கருத்து வருமாறு: *நல்ல செயல்களையே செய்யும் அந்த எச்சதத்த னிடமும் அவனுடைய பத்தினியிடமும் பலவகையான நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறும் வேதங்களினுடைய துறை விளக்கத்தை அடையும் வண்ணம் என்றைக்கும் வேதியர் களினுடைய குடும்பங்கள் தழைத்து பெருக்கத்தை அடையு மாறும் ஏழு உலகங்களில் வாழ்பவர்களும் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணமும் சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் சிற்சபையாகிய திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானாருக்கு உரிய சைவ சமயத்தின் உண்மை வளருமாறும் பெரிய தவத்தைப் புரிந்த தவசிகள் தங்களுடைய மெய், வாய், மூக்கு, காதுகள், கண்கள் என்னும் ஐந்து இந்திரியங்களையும் வென்ற வெற்றி விளங்கு மாறும் அந்த எச்சதத்தனுக்குப் புதல்வராக வந்து திருவவதாரம் செய்தருளினார் விசார சருமனார் என்பவர், பாடல் வருமாறு: - - 'நன்றி புரியும் அவர்தம்பால்

நன்மை மறையின் துறைவிளங்க என்றும் மறையோர் குலம்பெருக ஏழு புவனங் களும்உய்ய மன்றில் கடம்செய் பவர்சைவ

வாய்மை வளர மாதவத்தோர் . வென்றி விளங்க வந்துதயம்

செய்தார் விசாரசருமனார்.'