பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"474 பெரிய புராண விளக்கம்-5

அவற்றோடு நிரம்பியுள்ள சந்தங்களைப் பெற்ற இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் "என்னும் நான்கு வேதங்களும் அடங்க முன் காலத்தில் சலைவராகிய சிவபெருமானார் திருவாய் மலர்ந்தருளிச் செய்த சைவ ஆகமங்களை முன்பிறவியில் இருந்த ஞானத் சின் தொடர்பினால் அரும்பி மலரும் மலரினுடைய நறு மணத்தைப் போலத் தம்முடைய திருவுள்ளம் மலர்ச்சியை அடைய அதனோடு மலர்ச்சியை அடையும் பக்குவத்தைப் பெற்ற நல்லுணர்ச்சி சிறந்து விளங்கியது. பாடல் வரு மாறு:

' ஐந்து வருடம் அவர்க்கணைய

அங்கம் ஆறும் உடன்நிறைந்த சந்த மறைகள் உட்படமுன்

தலைவர் மொழிந்த ஆகமங்கள் முந்தை அறிவின் தொடர்ச்சியினால்

முகைக்கும் மலரின் வாசம்போல் சிங்தை மலர உடன்மலரும் '

செவ்வி உணர்வு சிறந்ததால்." அவர்க்கு-அந்த விசார சருமருக்கு. ஐந்து வருடம்ஐந்து பிராயங்கள். வருடம்: ஒருமை பன்மை மயக்கம் - "அணைய-அடைய. அங்கம் ஆறும்.வேதங்களினுடைய அங்கங்களாகிய, சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், சோதிடம், கற்பம் என்னும் ஆறு சாத்திரங்களையும் அங்கம்: ஒருமை பன்மை மயக்கம். உடன்-அவற்றோடு. நிறைந்த-நிரம்பியுள்ள சந்த-சந்தங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். மறைகள்-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண் வேதம் என்னும் நான்கு வேதங் களும். உட்பட-அடங்க. முன்.முன்காலத்தில், தலைவர். 'தலைவராகிய சிவபெருமானார். மொழிந்த-தம்முடைய சேசானம், தற்புருடம், அகோரம் வாம தேவம், சததியோ ஜோதம் என்னும் ஐந்து திருமுகங்களாலும் திருவாய் மலர்ந்