பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 475

தருளிச் செய்த, ஆகமங்கள்-காரணாகமம், காரியாகமம், காமிகாகமம், பெளஷ்கராகமம், மிருகேந் திராகமம் முதலிய சைவ ஆகமங்களை. முந்தை-தமக்கு முன்பிறவியில் இருந்த: அறிவின்-ஞானத்தினுடைய. தொடர்ச்சியினால்-தொடர் பால். முகைக்கும்-அரும்பி மலரும். மலரின்-மலரினுடைய. வாசம்போல்-நறுமணத்தைப் போல. சிந்தை-தம்முடைய திருவுள்ளம். மலர-மலர்ச்சியை அடைய. உடன்-அதனோடு' மலரும்-மலர்ச்சியை அடையும். செவ்வி-பக்குவத்தைப் பெற்ற, உணர்வு-நல்ல உணர்ச்சி. சிறந்தது.அவரிடம் சிறந்து விளங்கியது. ஆல்:ஈற்றசை நிலை.

பிறகு வரும் 14-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'நடந்து வரும் முறையில் விசார சருமனாருக்கு ஏழு பிராயங்களும் நிறையும் பருவம் வந்து சேர புகழையும் பெருமையையும் பெற்ற ஒப்பு இல்லாத உபநயனம் என்னும் சடங்கை நிறைவேற்றி விட்டு அறிவினால் இகழ்ச்சி புரியும் வழியைப் பெற்றவை அல்லாத யாவும் பொருந்தியிருந்தன என்றாலும் தம்முடைய விளங்கும் பரம்பரைக்கு ஏற்ற விதத் தில் வேதங்களை ஒதுமாறு செய்விக்கும் செயலை அந்த நாயனாரைப் பெற்றவராகிய எச்சதத்தர் ஆற்றுமாறு செய் தார். பாடல் வருமாறு: }

' நிகழும் முறைமை ஆண்டேழும்

நிரம்பும் பருவம் வந்தெய்தப் புகழும் பெருமை உபநயனப்

பொருவில் சடங்கு முடித்தறிவின் இகழும் கெறிய அல்லாத

எல்லாம் இயைந்த எனினும்தம் திகழும் மரபின் ஒதுவிக்கும் . செய்கை பயந்தார் செய்வித்தார்.' . நிகழும்-நடந்து வரும், முறைமை-முறையில். ஆண்டு. ஏழும்-விசார சருமருக்கு ஏழு பிராயங்களும். ஆண்டு: ஒருமை பன்மை மயக்கம். நிரம்பும்-நிறையும். பருவம் வந்து