பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 + பெரிய புராண விளக்கம்-5

குறை. உலப்பில-குறைவு இல்லாதவையாகிய. ஆயம்-பக். மாடுகளின் கூட்டம், பல்க-பலவாகப் பெருகி வளரும் வண்ணம். அளித்துள்ளார்-பாதுகாத்துக் கொண்டு இருக்கி றவர் அந்த நாயனார். -

பிறகு உள்ள 11-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அவ்வாறு ஆனாய நாயனார் செய்து வந்தமையால் கன்றுக் குட்டிகளோடு பால் கறப்பதை மறந்த பசுமாடுகளும், பால் கறப்பவையாகிய பசுமாடுகளும், பொலிவற்ற தலை களைப் பெற்ற மென்மையான கருப்பத்தை உடைய' பூசுமாடுகளோடு சேர்ந்துள்ள ஈன்றணிமையான பசுமாடு: களும், வெற்றியை உடைய காளை மாடுகளின் கூட்டத் தோடும் ஒவ்வொரு இனமும் வேறு வேறாகப் பொருந்தி' நிரம்பியிருக்கிற இடங்களோடு பல மந்தைகளும் அந்த ஊரில் இருக்கும். பாடல் வருமாறு:

' கன்றொடு பால்மறை நாகு கறப்பன பாலாவும்

புன்றலை மென்சினை ஆனொடு நீடு புனிற்றாவும் வென்றி விடைக்குல மோடும் இனந்தோறும் வெவ்வேறே. துன்றி நிறைந்துள சூழலுடன் பல தோழங்கள்." கன்றொடு-அவ்வாறு ஆனாய நாயனார் செய்து வந்த மையால் கன்றுக்குட்டிகளோடு; ஒருமை பன்மை மயக்கம். பால்மறை-பால் கறப்பதை மறந்த, நன்கு-கிழப்பசுமாடு களும். கறப்பன பால் ஆவும்-பாலை கறப்பவையாகிய பசுமாடுகளும், புன்-பொலிவற்ற. தலை-தலைகளைப் பேற்ற, ஒருமை பன்மை மயக்கம். மென்-மென்மையான. சினை-கருப்பத்தைக் கொண்ட. ஆனொடு-பசுமாடுகளோடு; ஒருமை பன்மை மயக்கம். நீடு-சேர்ந்துள்ள. புனிற்றாவும்ஈன்றணிமையான பசுமாடுகளும்; ஒருமை பன்மை மயக்கம். வென்றி-வெற்றியைப் பெற்ற விடை-காளைமாடுகளின், ஒருமை பன்மை மயக்கம். குலமோடும்-கூட்டத்தோடும். இனம்தோறும்-ஒவ்வோர் இனமும். வெவ்வேறு-வேறு: வேறாக. ர: அசைநிலை. துன்றி-பொருந்தி சேர்ந்து'