பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 481

த டி ைய க் .ெ க ா ண் டு . அவன்-அந்த இடையன். பு ைட ப் ப - அ ந் த ப் பசுமாட்டை அ டி க் க . மீது-அவனிடம். சென்று-போய். மிகும்-தம்முடைய திருவுள் ளத்தில் மிகுதியாக எழும். பரிவால்-இரக்கத்தால். வெகுண்டு-சினம் மூண்டு. விலக்கி-அந்த இடையனை அந்தப் பசுமாட்டை அடிக்காமல் தடுத்து விலக்கி விட்டு. மெய்-பசு மாடுகளின் பெருமையாகிய உண்மையை உணர்ந்து -அறிந்து கொண்டு. !

அடுத்து உள்ள 18-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'பரவி விளங்கும் அறுபத்து நான்கு கலைகளையும், சைவ ஆகமங்களாகிய சாத்திரங்களினுடைய பரப்பைப் பெற்ற தொகுதியைக் கற்றுத் தெரிந்து கொண்ட தன்மை யால், பொருந்தியிருக்கும் பெருமையைப் பெற்றவையும் பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ளை வயும் ஆகிய இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர் வண வேதம் என்னும் நான்கு வேதங்களின் மூலமாக திகழும் இந்தப் பூ மண்டலத்தில் எல்லா நூல்களையும் தெளிவாகக் கற்று அறிந்து கொண்ட அர்த்தத்தின் நிலையை அடைவதற் குத் தெரிந்து கொண்ட தம்முடைய திருவுள்ளத்தினால் பசு மாட்டினுடைய பெருமையை உள்ளவாறு தெரிந்து கொண்ட வராகிய அந்த விசாரசருமர் பசுமாட்டை அடித்த அந்த இடையனுக்குத் திருவாய் மலர்ந்தருளிச் செய் வாரானார்.' பாடல் வருமாறு: - -

  • பாவும் கலைகள் ஆகம நூற்

பரப்பின் தொகுதிப் பான்மையினால் மேவும் பெருமை அருமறைகள்

மூல மாக விளங்குலகில் யாவும் தெளிந்த பொருள்நிலையே

எய்த உணர்ந்த உள்ளத்தால் ஆவின் பெருமை உள்ளபடி -

அறிந்தார் ஆயற் கருள்செய்வார்.'