பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனாயநாயனார் புராணம் 45:

எனலும் ஆம் நிறைந்துள-நிரம்பியிருக்கிற. உள:இடைக் குறை. சூழலுடன்-இடங்களோடு; ஒருமை பன்மை மயக்கம்" பல தோழங்கள்-பல மந்தைகளும் அந்த ஊரில் இருக்கும். அடுத்து வரும் 12-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பசுமாடுகளினுடைய வரிசையான கூட்டம் அவ்வாறு பலவாகப் பெருகும் வண்ணம் அந்தக் கூட்டத்தைப் பாது: காத்து எல்லாக் காலத்திலும் பசுமாடுகளை மேய்க்கும். இடையர்கள் தாம் இடும் கட்டளைகளைச் செய்ய: இடையர்களினுடைய குடும்பங்களை விரும்பிப் பாதுகாக்கும், காவலராகிய அந்த ஆனாய நாயனார் தம்முடைய தலை: வனாகிய நடராஜப் பெருமானுடைய திருவடிகளுக்கும். பக்தியைப் பெற்ற சங்கீதத்தில் அமைந்த துளைகளைக் கொண்ட இசைக்கருவியாகிய புல்லாங்குழலை. வாசித்தவை: மேற்கொண்டார். பாடல் வருமாறு: . . . ஆவின் கிரைக்குலம் அப்படி பல்க அளித்தென்றும் கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம்பேணும் காவலர் தம்பெரு மான்அடி அன்புறு கானத்தின் மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேற்கொண்டார். ஆவின்-பசுமாடுகளினுடைய ஒருமை பன்மை மயக்கம். நிரை-வரிசையாகிய. க்:சந்தி. குலம்-கூட்டம். அப்படி-- அவ்வாறு. பல்க-பலவாகப் பெருகும் வண்ணம், அளித்துஅந்தக் கூட்டத்தைப் பாதுகாத்து. என்றும்-எல்லாக் காலத்திலும், கோவலர்-பசுமாடுகளை மேய்க்கும் இடை யர்கள்; ஒருமை பன்மை மயக்கம். ஏவல்-தாம் இடும் கட்டளைகளை ஒருமை பன்மை மயக்கம். புரிந்திட" செய்து நிறைவேற்ற ஆயர்-இடையர்களினுடைய, ஒருமை. பன்மை மயக்கம் குலம்-குடும்பங்களை ஒருமை பன்மை: மயக்கம். பேனும்-விரும்பிப் பாதுகாக்கும். காவலர்-மன்ன ராகிய அந்த ஆனாய நாயனார். தம்-தம்முடைய பெருமான்-தலைவராகிய நட்ராஜப் பெருமானுடைய அடிதிருவடிகளின்பால், ஒருமை பன்மை மயக்கம். அன்பு--