பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 489

உழைமான்மறிக்கன்று-உழையாகிய மான் மறிக் குட்டி. துள்ளும்-துள்ளி எழும். காத்தார்-திருக்கரத்தைப் பெற்ற நடராஜப் பெருமானார். அணி-அணிந்து கொள்ளும். பணி யின்-பாம்புகளினுடைய, ஒரு மை பன்மை மயக்சம். சுடர்ஒளி, சூழ்-சுற்றி வீசும். மணிகள்-மர்ணிக்கங்களும். சுரநதி நீர்-வேநதியாகிய கங்கையாற்றின் புனலும். தெள்ளும். தெளிவாக விளங்கும். சடையார்.சடா பாரத்தைத் தம்மு டைய தலையின் மேற் பெற்றவராகிய அந்தப் பெருமானார். தேவர்கள் தம்-தேவர்களுடைய. தம்: அசை நிலை. பிராட் டியுடனே-தலைவியாகிய சிவகாம சுந்தரியோடு. ஏ:அசை நிலை. சேர-சேர்ந்து அமரும் வண்ணம். மிசை-தங்கள் மேல். க்:சந்தி, கொள்ளும்-ஏற்றிக் கொள்ளும். சின-கோபத் தைப் பெற்று. மால்-திருமாலாகிய, விடைத்தேவர்-இடப தேவர். குலம்-பிறந்த சாதி. இச்சுரபி குலம்-இந்தப் ப5 மாடு களினுடைய கூட்டம், அன்றோ-அல்லவோ? இடப தேவர் பசு மாட்டின் ஆண். அவர் மேல் நடராஜப் பெருமானாரும் சிவகாம சுந்தரியும் ஆரோகணித்து எழுந்தருளுவார்கள்.

பிறகு வரும் 23-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: விசாரசருமர் என இத்தகையவற்றையே பவவற்றை யும் எண்ணிப் பார்த்து, இதமான வழியிலேயே மேயச் செய்து இந்தக் கன்றுக்குட்டிகளோடு இருக்கும் பசுமாடுகளி னுடைய வரிசையைப் பாதுகாக்கும் இந்தச் செயலுக்கு மேலாக வேறு கடமை அடியேனுக்கு @ು ತGಾ; இந்தச் செயலே சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் சிற். சபையாகிய திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளும் நடராஜப் பெருமானாருடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளை வணங்கும் வழியாக இருப் பதும் ஆகும்.” என எண்ணி அங்கே நின்றுகொண்டிருந்த அந்த இடையனைப் பார்த்து, "நீ இனிமேல் இந்தப் பசுமாடு களினுடைய வரிசையைப் புல்வெளியில் மேய்ப்பதை விட்டு விடுவாயாக." என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்வா