பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 493

காலும் புல்லின் அவைவேண்டுங்

தனையும் மிசையும் தலைச்சென்று.' இந்தப் பாடல் குளகம். கோலும்-விசார சருமர் தம்மு டைய திருக்கரங்களில் ஒரு தடியையும். கயிறும். கயிற்றையும். கோண்டு-எடுத்துக் கொண்டு. குழை-மெல்லியதாக இருக்கும். க்:சந்தி. குடுமி-உச்சிக் குடுமி. அலைய- காற்றில் அசைந்து கொண்டிருக்க. க்:சந்தி. குலவு-விளங்கும். மான் தோலும்கிருஷ்ணாஜினமும் நூலும் அதைக் கட்டியிருக்கும் பூணுாலும். சிறு-தம்முடைய சிறிய. மார்பில்-திருமார்பில். துவள-அசைய. அரை-தம்முடைய இடுப்பில், க்:சந்தி.கோவணம்-கெளபினம். சுடர-ஒளியை வீச விளங்க. ப்:சந்தி. பாலும்-தங்களுடைய மடிகளில் சுரக்கும் பாலும், பயனும்-கோமயம், கோஜலம், வெண்ணெய், நெய், தயிர் என்னும் பஞ்ச கவ்வியங்களா கிய பிரயோசனங்களும்; ஒருமை பன்மை மயக்கம். பெருகபெருகி அமைய.வரும்-நடந்துவரும். பகக்கள்-பசுமாடுகளை. மேய்க்கும்-மேயுமாறு செய்யும். பான்மையினால்-தன்மை யோடு; உருபு மயக்கம். காலும்-போதுமான அளவு இருக்கும். புல்லின்-புல் வெளியில் முளைத்திருக்கும் புற்களில்: ஒரும்ை புன்மை மயக்கம். அவை-அந்தப் பசு மாடுகள். வேண்டுந்த னையும்-வேண்டுமளவும். மிசையும்-மேயும். தலை-இடத் துக்கு. ச்:சந்தி. சென்று-அந்த விசார சருமர் எழுந்தருளி. -

பிறகு வரும் 26-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

- "விசாரசருமர் புல்வெளியில் உரிய வேளைகளில் பசுமாடு களை மேயச் செய்தும், அங்கே முளைத்திருக்கும் புற்களைப் பிடுங்கியும், அவற்றைப் பசுமாடுகளுக்கு வழங்கியருளியும், அந்தப் பசமாடுகளினுடைய துன்பத்தைப் போக்கியும், இத மாத அந்தப் பசு மாடுகளை நீரைக் குடிக்கும் மண்ணியாற்றி னுடைய துறையில் நல்ல குளிர்ச்சியைப் பெற்ற புனலைக், குடிக்கச் செய்தும் அவற்றினுடைய அச்சத்தைத் தமக்கு எதிரில் போக்கி விட்டு நல்லவையாக இருக்கும் வழிகளில் தமக்கு முன்னால் அந்தப் பசு மாடுகள் நடந்து போக,